Connect with us
viruman

Cinema News

விருமன் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு….கார்த்திக்கு இன்னொரு வெற்றிப்படமா?….

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

viruman

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 3ம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதற்கான பிரம்மாண்ட விழா மதுரையில் நடைபெற்றது. இதில், சூர்யா, கார்த்தி, அதிதி, இயக்குனர் ஷங்கர், சூரி என பலரும் கலந்து கொண்டனர்.

viruman

இந்நிலையில், கடந்த 3ம் தேதி வெளியான இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இதுவரை 58 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். எனவே, இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என கருதப்படுகிறது.

விருமன் திரைப்படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top