விருமன் வெற்றி விழா..! அதீதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சூர்யா..!

by Rohini |
surya_main_cine
X

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் விருமன். இந்த படத்தை முத்தையா இயக்கினார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

surya1_cine

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகளான அதீதி சங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும் அடிப்படையில் பாடகியாகவும் திகழ்கிறார்.

surya2_cine

இந்த படத்தில் கூட ஒரு பாடல் பாடியிருக்கிறார். படம் வெளியான முதலே கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படக்குழுவினர் நேற்று விருமன் படத்தின் வெற்றியை தன் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடியது.

surya3_cine

அப்போது அதீதிக்கு சர்ப்ரைஸாக சூர்யா தரப்பில் இருந்து டைமண்ட் ப்ரேஸ்லெட் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. முதலில் அதை மறுத்த அதீதி பின் சூர்யா எடுத்து அதீதி கையில் அவரே போட்டு விட்டது அதீதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Next Story