ஆரம்பமே அலைக்கழிப்பா?...விருமனுக்கு வேட்டு வைத்த பிரகாஷ்ராஜ்!... அப்செட்டில் படக்குழு...

தமிழ் சினிமாவில் சில பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்ல மாட்டார்கள். மொத்த படக்குழுவும் இவர்களுக்காக காத்திருக்கும். ஆனால் ,ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது வேறு படங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள். நவரச நாயகன் கார்த்திக், சிம்பு, பிரகாஷ்ராஜ் என பல உதாரணங்கள் இருக்கிறது.

viruman

தற்போது பிரகாஷ்ராஜ் செய்த சொதப்பலால் விருமன் படக்குழு அப்செட்டில் இருக்கிறது. கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் அவரை வைத்து இயக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

prakshraj

ஷங்கரின் மகள் முதன் முதலாக இப்படத்தில் அறிமுகவாவதால் இப்படத்திற்கு பெரிய கவன்ம் கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ம் தேதி தேனியில் துவங்கியது.

viruman

பல நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் பல காட்சிகளை எடுக்க முத்தையா திட்டமிட்டிருந்தார். ஆனால், முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எனவே, படக்குழு சென்னை திரும்பியுள்ளது. ஏற்கனவே, அருண்விஜயை வைத்து ஹரி இயக்கி வரும் ‘யானை’ படத்தில் அருண்விஜயின் அண்ணனாக பிரகாஷ்ராஜ் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. எனவே, அவருக்கு பதில் சமுத்திரக்கனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story