கமல் படங்களை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதேனும் புதிது புதியதாக கற்றுக்கொள்ள முடியும். அவர் இயக்கும் படங்கள், அவர் கதை திரைக்கதை எழுதிய திரைப்படங்கள், அவர் நடித்த படங்கள் என எதுவும் விதிவிலக்கல்ல அனைத்திலும் ஏதேனும் ஒன்று புதியதாக நாம் கற்றுக்கொள்ள முடியும்.
அந்தளவுக்கு கமலின் திரைப்படங்கள் தமிழசினிமாவுக்கு நிறைய கற்றுக்கொடுத்துவிட்டன கற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றன. அதே போல, அவரது படங்களில் ஜாதியை உயர்த்தி சொல்கிறார் என்கிற எண்ணமும் சிலர் விமர்சனங்களை வைப்பதுண்டு.
அதில் ஒரு படம் தான் விருமாண்டி. அதில் கமல், பசுபதி என அந்த குரூப் தேவர் சமூகத்தை சார்ந்தது என கூறப்பட்டிருக்கும். மேலும், அவர்கள் சிவ வழிபாடு எனும் சைவ மத வழிபாடுகளை காட்டியிருப்பர். அதற்கு எதிர் தரப்பு நெப்போலியன் தரப்பு நாயக்கர் வம்சம் வைணவ வழிபாடு செய்பவர்கள் போல சித்தரித்திருப்பார்.
இதையும் படியுங்களேன் – ஆளே கிடைக்கல இப்போ குரங்கு தான் ஹீரோ.! பரிதாப நிலையில் A.R.முருகதாஸ்.!
வன்முறையை தூண்டுவது அதிகப்படியாக குற்றங்களை செய்வது என அனைத்தும் கமல் பசுபதி கும்பல் செய்துகொண்டிருக்கும். அதே போல நெப்போலியன் தரப்பு நீதி நியாயம் நீதிமன்றம் என காட்டப்பட்டிருக்கும். நெப்போலியனுக்கும், கமலுக்கும் ஓர் நல்ல உறவு இருக்கும். பசுபதி உடன் இருக்கும் போது பட்டையுடன் இருப்பவர்,
நெப்போலியன் பக்கம் வந்த பின்னர் பட்டை போடுவதை நிறுத்தி கொள்வார். அதன் பின்னர் நாமத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டு கொள்வார். அவரது முதல் காட்சி ஜெயிலில் ஆரம்பிக்கும் அப்போதே நெற்றில் பட்டையுடன் சேர்த்து நாமத்தையும் இட்டு கொண்டிருப்பார்.
இதனை சுட்டிக்காட்டி தான் சிலர், கமல் அவர் பிறந்து வளர்ந்த வைணவ மதத்தை தூக்கி காட்டுகிறார் என அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
எது எப்படியோ கமல் தனது சித்தாந்தத்தின் மூலம் எதனை கூற வருகிறார் என்பது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது வேறு ஒன்றாக தான் தோன்றும். அதனால் தான் அவரது படங்கள் காலங்கள் கடந்தாலும் தற்போதும் பேசு பொருளாக அதில் ஒரு புள்ளியை கண்டறிந்து விசாரித்து வருகின்றோம்.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…