
Flashback
கையில் பேப்பர் இல்ல.. மண்ணுல எழுதி வந்த வரிகள்.. எப்பேற்பட்ட சூப்பர் ஹிட் கமல் பாடல்
2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விருமாண்டி. தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. முதலில் இந்த படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியாக இந்த படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியது .அதன் பிறகு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இந்த படத்தை பற்றி விளக்கம் அளித்து அதன் பிறகு தலைப்பு விருமாண்டி என மாற்றப்பட்டது.
இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் கதை திரைக்கதை இயக்கம் என அனைத்திலும் கமல் ஆச்சரியப்படுத்தினார் .படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் .அவர் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. குறிப்பாக சண்டியரே சண்டியரே, கொம்புல பூவ சுத்தி, ஒன்னை விட போன்ற பாடல்கள் இன்றளவு மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றது .
இந்த நிலையில் முதலில் விருமாண்டி படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என இளையராஜா மறுத்திருக்கிறார். இந்த படத்தின் கதையைப் பற்றி கமல் இளையராஜாவிடம் சொல்லும் போது ஒரே வன்முறை காட்சிகளாக இருப்பதாக சொல்லி இருந்திருக்கிறார். அதனால் தான் இளையராஜா இப்படிப்பட்ட படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகு படக்குழுவிடம் தீவிர ஆலோசனை செய்து அங்கிருந்த சில பேர் கமலிடம் இந்த காட்சிகளை சொன்னீர்களா? அந்த காட்சிகளை சொன்னீர்களா என்று கேட்டதற்கு இவர் இல்லை என சொல்லி இருக்கிறார். வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே சொன்னால் அவர் எப்படி சம்மதிப்பார் என இவருக்கு அறிவுரை கூறி இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் இளையராஜாவைப் போய் கமல் சந்தித்திருக்கிறார்.

viru
முழு கதையையும் சொன்ன பிறகு இளையராஜா இந்த இடத்தில் ஒன்னை விட என அந்த முதல் வரியை பாடி இப்படி ஒரு பாடல் வந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என இளையராஜா கூறினாராம். அதன் பிறகு கமல் இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. ஒரு நல்ல கவிஞரை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் என சொல்ல அது எதற்கு நீங்களே வரிகளை எழுத வேண்டியதுதானே என இளையராஜா சொன்னாராம்.
அதற்கு கமல் எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் பொழுது வரிகளை எழுதுவது என்பது சிரமம் என கூற அதான் முதல் வரியை கொடுத்து விட்டேனே. மீதி வரிகளை நீங்கள் எழுதுங்கள் என சொன்னாராம் இளையராஜா. அதன் பிறகு தான் இந்த பாடல் உருவாகி இருக்கிறது. இதில் முதல் வரி மட்டும் இளையராஜா சொன்னது. மற்ற வரிகள் கமல் எழுதியதாம். அதுவும் படப்பிடிப்பில் உட்கார்ந்து இருக்கும் பொழுது அங்கு இருந்த மணலிலேயே வரிகளை எழுதி எழுதி உருவாக்கினாராம் கமல்.