தர்ஷா குப்தா கையை புடிச்சி விஷால் எங்க தள்ளிட்டு போறாருன்னு பாருங்க!.. என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவின் கையை பிடித்துக்கொண்டு நடிகர் விஷால் ஓடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
ரத்னம் திரைப்படத்தை கடைசி நேரத்தில் வெளியிட விடாமல் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தனது படத்தின் புரமோஷனை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…
ரத்னம் படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் பெரிதாக எந்த ஒரு புரமோஷனையும் செய்யவில்லை. வெறும் ஹரி மற்றும் விஷால் மட்டுமே புரோமோஷன் செய்த வருவதால் ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள் என நினைத்த விஷால் பிரியா பவானி சங்கருக்கு பதிலாக இளம் நடிகை தர்ஷா குப்தா உடன் செய்த புரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போர் அடிக்குது என்ன பண்ணலாம் என தர்ஷா குப்தா யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், பின்னாடி திரும்பி பார்த்தால் ரத்னம் படத்தின் போஸ்டர் உள்ளது. இந்தப் படத்துக்கு போகலாமா என அவர் யோசிக்கும் நேரத்தில், திடீரென அந்த இடத்திற்கு வரும் விஷால் ரத்னம் படத்துக்குத்தான் போகிறோம். டிக்கெட் எடுத்து விட்டேன். வா போகலாம் என தர்ஷா குப்தாவின் கையை பிடித்துக்கொண்டு ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்திற்கு உதவிய தளபதி விஜய்!.. அட இத கமலே எதிர்பார்த்திருக்க மாட்டாரே!…
எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு நடிகர் விஷால் மற்றும் ஹரி ரத்னம் படத்தின் மீது உள்ள நம்பிக்கையின் பேரில் பெரிய அளவில் புரோமோஷன் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத நிலையில், விஷால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவுக்கு சற்றே நிம்மதியைக் கொடுக்கும் என கூறுகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..