விஷாலுக்கு மகள் மாதிரி அன்பைக் கொடுத்தேன்... வேற மாதிரி பண்ணிட்டானே... புலம்பிய மிஷ்கின்

by sankaran v |
vishal myskkin
X

vishal myskkin

விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கினார். இந்தப் படம் 2017ம் ஆண்டு வெளியானது. ஆண்ட்ரியா, வினய், பாக்கியராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்ரன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அரோள் கரோலி இசை அமைத்துள்ளார். படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

துப்பறிவாளன்2

Also read: மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்!.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா?!….

துப்பறிவாளன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தையும் விஷால் தயாரித்தார். பல பிரச்சனைகளால் படம் பாதியில் நின்று போனது. அப்போது இயக்குனர் மிஷ்கினுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. விஷால் மிஷ்கின் உதவியாளர்களை மோசமாக நடத்தினாராம்.

உதவியாளர் முக்கியமா?

அதுமட்டும் அல்லாமல் மிஷ்கினின் மேலாளரையும் மோசமாக நடத்தியுள்ளார். இது தொடர்ந்தால் நான் படம் பண்ண மாட்டேன் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். அதற்கு நான் முக்கியமா, உங்க உதவியாளர் முக்கியமா என அவர் கேட்க, உதவியாளர் தான் முக்கியம் என்று சொல்லி விட்டு மிஷ்கின் வந்து விட்டாராம்.

நவம்பர் சூட்டிங்

Thupparivalan 2

Thupparivalan 2

தொடர்ந்து இந்த சிக்கல் நீடித்த நிலையில் விஷாலே இந்தப் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசை அமைக்க உள்ளாராம்.

வருத்தத்தை தந்த விஷால்

Also read: ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ்

இப்போது மிஷ்கின் அந்தப் பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில ரொம்ப வருத்தத்தை தந்ததே விஷால் தான். என் மகளுக்கு கொடுத்த எல்லா அன்பையும் அவனுக்குக் கொடுத்தேன். என் சட்டையைப் புடிச்சிக் கூட அண்ணே காசு கொடுக்க முடியாது. எனக்கு படம் பண்ணிக் கொடு அண்ணேன்னு கேட்டு இருக்கலாம். ஆனா அவன் என்ன வேற மாதிரி பண்ணது தான் ரொம்ப வருத்தமாகிடுச்சு என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

Next Story