Cinema History
அவனுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம்?!.. விஷால் – உதயநிதி இடையே வெடித்த மோதல்.. டிராப் ஆன திரைப்படம்!..
செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியான திமிறு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், விஷால் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் பலரும் முன்வந்தனர்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். லிங்குசாமியின் இயக்கத்தில் விஷால் நடித்து 2005ம் வருடம் வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இந்த படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரணும், ஜோடியாக மீரா ஜாஸ்மினும், வில்லனாக மலையாள நடிகர் லால் ஆகியோர் நடித்திருந்தனர். பரபர ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம் விஷாலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: எனக்கும் லட்சுமி மேனனுக்கும் affair? எங்க அப்பா செஞ்சதுதான் ஹைலைட் – மனம் திறந்த விஷால்
இப்படம் மூலம் லிங்குசாமியும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அப்படத்திற்கு பின் இப்போது வரை லிங்குசாமியால் ஒரு சூப்பர்ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. அதேபோல், விஷாலுக்கும் அதுபோல ஒரு வெற்றிப்படம் அமையவில்லை. பூஜை, இரும்புத்திரை மற்றும் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
ஆனால், கடந்த 18 வருடங்களில் விஷால் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை சந்தித்தது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எந்த படங்களும் ஓடவில்லை. இப்போது மார்க் ஆண்டனி படத்தை மட்டுமே நம்பி காத்திருக்கிறார் விஷால்.
இதையும் படிங்க: நடுத்தெருவில் நிர்கதியாக நிக்க வைத்தவர் மிஷ்கின்… வேறு ஒருவரா இருந்தால் நெஞ்சு வலியே வந்திருக்கும்! விஷால் தடாலடி!
பல வருடங்களுக்கு முன்பு சண்டக்கோழி 2 படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் உதயநிதி. லிங்குசாமியே இயக்குவது என முடிவானது. ஆனால், லிங்குசாமிக்கு கொடுப்பதாக சொன்ன சம்பளம் மிகவும் அதிகம். அதை குறையுங்கள் என விஷால் சொல்ல அதை உதயநிதி ஏற்கவில்லை. அதனால் அந்த படத்திலிருந்தே விஷால் விலகிவிட்டார்.
அதன்பின் பல வருடங்கள் கழித்து விஷாலே தயாரித்து நடித்து, லிங்குசாமி இயக்கி சண்டக்கோழி 2 படம் வெளியானது. ஆனால், அந்த படம் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த படமும் ஓடலன்னா தலையில துண்டுதான்!. இது என்னடா புரட்சி தளபதிக்கு வந்த சோதனை….