தப்பு கணக்கு போட்டு மாட்டிக் கொண்ட நடிகர் விஷால்...! கடைசியில் கோர்ட் வைத்த செக்...
நடிகர் விஷால் தற்போது ஒரு முழுப்பிரச்சினையில் மாட்டிக் கொண்டதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே படங்கள் சரிவர போகாததால் மனவருத்தத்தில் இருக்கும் நடிகர் விஷாலுக்கு இப்படி ஒரு பிரச்சினையா என்று ஆறுதல் கூறி வருகின்றனர். இவரது நடிப்பில் லத்தி என்ற படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் இவரின் எதிர்கால திட்டங்களுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி பிரபல லைக்கா புரடக்ஷன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என கூறி வருகின்றனர்.
இவரின் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் படம். இந்த படத்தில் நடிகை டிம்பிள் ஹையாதி ஜோடியாக நடித்தார். படம் ஓரளவுக்கே பேசப்பட்ட நிலையில் இந்த படத்திற்காக லைக்கா புரடக்ஷனிடம் 21 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார் என கூறுகின்றனர். கடனை திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருக்கும் விஷால் லைக்கா நிறுவனத்தை இழுத்தடிக்க நேரடியாக நீதிமன்றத்தை நாடியது நிறுவனம்.
இதையும் படிங்கள் : மைக் மோகனை விரட்டி விரட்டி காதலித்த நடிகைகள்…காரணம் ஏன் தெரியுமா?….
நீதிமன்றமும் நடிகர் விஷாலிடன் இதை பற்றி கேட்க தன் சொந்தக் கதையை பாடியுள்ளார். அதாவது இவ்ளோ பணத்தை என்னால் இப்பொழுது திரும்ப தர முடியாது. ஏற்கெனவே இருக்கும் கடனை என் சம்பளத்தை வைத்து தான் சரிசெய்ய வேண்டும் . எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என கூறியுள்ளாராம்.
இதையெல்லாம் கேட்ட நீதிமன்றம் செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் உங்கள் சொத்து மதிப்பு பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாம். சொத்து மதிப்பை தாக்கல் செய்வதென்பது எந்த அளவுக்கு ரிஸ்க் என்று விஷாலுக்கும் தெரியும். அதனால் தான் இப்பொழுது விழி பிதுங்கி நிற்பதாக தெரிந்த சில வட்டாரங்கள் கூறிவருகின்றனர். ஆனால் இன்னும் சில பேர் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் என்றால் வரவு செலவுக் கணக்கை முழுவதுமாக பார்த்து செட்டில் ஆனதான் அன்று வீட்டிற்கே போவாராம். சொந்த பணம் என்றால் அப்படி ஓசி பணம் என்றால் இப்படியா என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.