விஜய் ரசிகர்களால் விஷாலுக்கு ஏற்பட்ட சிக்கல்!.. வாயக் கொடுத்து மாட்டிக் கொண்ட சம்பவம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய். அதிகப்படியான ரசிகர்களை கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். விஜயை பற்றி ஒரு செய்தி தெரியாமல் தவறாக சமூக வலைதளங்களில் பரவினால் அடுத்த நொடியே ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு ஒட்டுமொத்த இணையமும் ஆளாகிவிடும்.
அந்த அளவுக்கு விஜய் மீது அவரது ரசிகர்கள் தீராத காதல் வைத்திருக்கிறார்கள். மேலும் விஜய் லியோ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.
ஏகப்பட்ட நடிகர் பட்டாளங்களை கொண்டு லியோ படம் பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் முதலில் அர்ஜூனுக்கு பதிலாக லியோ படத்தில் வில்லனாக கமிட் ஆனது நடிகர் விஷால் தான் என அனைவருக்கும் தெரியும்.
ஆனால் விஷால் அதிக சம்பளத்தை கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் படத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல் சமூகவலைதளங்களில் பரவியது. மேலும் விஜய் ரசிகர்கள் இதை வைத்து கண்டபடியாக விஷாலை திட்டி தீர்த்தனர்.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் ‘இந்த சமயத்தில் தான் விஷால் அதிபுத்திசாலித்தனமாக ஒரு விஷயத்தை செய்தார். விஜய் ரசிகர்கள் தன் மேல் கொலவெறியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட விஷால் அவசரமாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் விஜயை வைத்து நான் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் ஆஃப் செய்தார்.’ என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
விஜய் மட்டுமில்லை சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகரை பகைத்துக் கொண்டால் அவரது ரசிகர்களால் இருக்கிற மார்கெட்டும் போய்விடும் என்பதை நன்கு அறிந்து விஷால் செயல்பட்டார் என்று அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க : இதுதான் என் வாழ்க்கையிலேயே பெரிய ஆசை! – மனைவியின் ஆசைக்காக விஜய்யின் அப்பா செய்த காரியம்..!