Cinema News
மார்க் ஆண்டனிக்கு தடைய போடு.. விஷாலின் ஆசையில் மண்ணை போடு… என்னங்க இப்டி ஆச்சு?!
Mark Antony: விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் வரும் செப்டம்பர் 15ந் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் தற்போது அந்த படத்துக்கு திடீரென தடை விதிக்கப்பட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷாலுடன், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட டாப் பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். டைம் ட்ராவல் படமாக எடுக்கப்பட்டு இருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு ஏங்கி கொண்டு இருக்கும் விஷால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்து இருக்கிறாராம்.
இதையும் படிங்க: நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..
மேலும் 80களில் டாப் ஹிட் நாயகியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. குத்து பாட்டுக்கு ஆடினால் கூட அவருக்கு ஒரு கூட்ட ரசிகர்கள் இருந்தனர். தற்போது அவரை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி மார்க் ஆண்டனி படத்தின் ஒரு பாடலுக்கு ஆட வைத்து இருக்கின்றனர். இது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தினை 15ந் தேதி வெளியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரிக்கும் போது, தயாரிப்பாளர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சத்தினை லைகா நிறுவனம் திருப்பி கொடுத்தது. அந்த கடனை விஷால் அடைக்கும் வரை அவரின் படங்கள் எல்லாத்தையும் லைகா தான் வெளியிடும் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் ! இத செஞ்சிருக்கவே கூடாது – மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
ஆனால் அதை மதிக்காத விஷால் வீரமே வாகை சூடும் படத்தினை வெளியிட்டார். பிரச்னை கோர்ட் படியேறியது லைகா. இதனால் விஷால் நீதிமன்றத்தில் 15 கோடியை டெபாசிட் செய்யவும், அதுவரை எந்த படத்தினையும் ரிலீஸ் செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டது.
ஆனால் விஷால் இதுவரை எந்த டெபாசிட்டையும் செலுத்தவில்லை. நிதியே இல்லை என விஷால் அன்றைய நாளே ஒரு கோடியை ஒரு படத்துக்கும் வாங்கி இருக்கிறார். இதனால் உடனே பணத்தினை டெபாசிட் செய்யணும். இல்லையென்றால் படத்தை வெளியிட தடை உத்தரவு என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மார்க் ஆண்டனி மீண்டும் பெட்டியில் முடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.