குக் வித் கோமாளியில் இருந்து விரட்டப்பட்டவருக்கு அடைக்கலம் தந்த விஷால்… என்ன மனுஷன்யா!!

Published on: February 8, 2023
Vishal
---Advertisement---

விஜய் தொலைக்காட்சியில் தற்போது “குக் வித் கோமாளி” சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று புகழ்கிறார்கள். கடந்த 3 சீசன்களை விட மிக உற்சாகமாக இந்த சீசன் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Cooku With Comali
Cooku With Comali

“குக் வித் கோமாளி” சீசன் 4 நிகழ்ச்சியின் தொடக்க வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக அறியப்பட்ட ஓட்டேரி சிவா கோமாளிகளில் ஒருவராக பங்கேற்றார். ஆனால் சென்ற வாரம் அவர் பங்குபெறவில்லை.

அதாவது அவர் மது அருந்துவிட்டு அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதாகவும் ஆதலால் விஜய் டிவி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, ஓட்டேரி சிவா குறித்து ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Otteri Siva
Otteri Siva

அதாவது நடிகர் விஷால், தற்செயலாக ஒரு இடத்தில் ஓட்டேரி சிவாவை சந்தித்திருக்கிறார். அவரை அருகில் அழைத்து வெகு நேரம் பேசியதில் விஷாலுக்கு அவரை மிகவும் பிடித்துப்போனதாம். அதன் பின் ஓட்டேரி சிவாவை தனது அலுவலகத்திலேயே தங்கிவிடுமாறு கூறியுள்ளாராம்.

Vishal
Vishal

மேலும் எதாவது பட வாய்ப்புகள் வந்தால் அந்த பணத்தை அவரே வைத்துக்கொள்ளுமாறும் அலுவலகத்திற்கு வாடகை என எதுவும் தரவேண்டாம் எனவும் கூறியிருக்கிறாராம். விஷால் இவ்வாறு ஓட்டேரி சிவாவுக்கு உதவி செய்துள்ளார் என்று வெளியான தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவை கலட்டிவிட்டு உலக நாயகனுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்!… அப்போ வாடிவாசல் அவ்வளவுதானா?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.