விஷால் கையை உடைத்து கேரளாவுக்கு அனுப்பிய படக்குழு.! வெளியாக அதிர்ச்சி வீடியோ.!

விஷால் நடிப்பில் கடைசியாக வீரமே வாகை சூடும் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்க லாபத்தை கொடுத்து வருகிறது.

இதனை அடுத்து புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார்.

சென்னையில் இப்பட சண்டைக்காட்சிகள் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அந்த சண்டைக் காட்சியின்போது விஷால் ஒரு கட்டிடத்தில் இருந்து குதிப்பது போல படமாக்கப்பட்டது.

இதையும் படியுங்களேன் -இதுவாவது தேறுமா?! அப்செட்டில் தனுஷ்.! நம்பிக்கையுடன் செல்வராகவன்.!

அப்போது அவர் கையில் அடிபட்டுவிட்டது. சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டு விஷால் கேரளாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவை விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story