Connect with us

இதுவரை செஞ்சதே போதும்… ஆந்திர பக்கம் அரசியலில் விஷால்… பின்னணி சம்பவம் இதோ..

Cinema News

இதுவரை செஞ்சதே போதும்… ஆந்திர பக்கம் அரசியலில் விஷால்… பின்னணி சம்பவம் இதோ..

தமிழ் சினிமாவில் ஆறடி உயரம் ஆக்சன் ஹீரோவுக்கு அளவெடுத்து செஞ்ச மாதிரி பொருத்தமான நபர் என்ற பெருமையை பெற்றவர் விஷால். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஷால் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் ஏனோ தற்போது ஒரு மிகப்பெரிய ஹிட்டுகாக வருடங்கள் கடந்து காத்திருக்கிறார்.

இவர் இடையில் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். ஏன் அந்த சமயம் தமிழகத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஐவரும் வேட்புமனுதாக்கல் செய்து பரபரப்பை கூட்டினார். ஆனால் அந்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

தற்போது தெலுங்கு மீடியா பக்கம் ஒரு செய்தி பரவி வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் இரண்டும் ஒன்றாக நடைபெற உள்ளது. அந்த சமயம் தமிழக எல்லையை ஒட்டிய குப்பம் எனும் ஆந்திர மாநில சட்டமன்ற தொகுதியில் விஷாலை நிற்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் –  அந்த மாதிரியான கேள்வி.. இனி விஜய் சேதுபதி படமே வேண்டாம்.! இளம் நடிகையின் அதிரடி முடிவு.!

அதாவது குப்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக மற்றும் ஆந்திர மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். ஆதலால் இரண்டு பக்கமும் பிரபலமான ஒரு நபர் நிற்க வைத்தால், நன்றாக இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு கட்சியினர் விருப்பப்படுகின்றனராம். விஷாலின் தந்தை அந்த பகுதியில் தான் கிரானைட் கம்பெனி நடத்தி வருகிறார்.

ஆதலால் விஷால் அங்கு தெரிந்த முகம். தமிழகம் மற்றும் தெலுங்கு இரண்டு பக்கமும் தெரிந்த முகமாக இருக்கும் விஷாலை அந்த தொகுதியில் களம் இறக்க சந்திரபாபு கட்சி தீர்மானித்துள்ளதாக ஆந்திர செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top