சூட்டிங்கிற்கு ஒழுங்காவே வர்றது இல்ல -  விஷால் மீது குவியும் புகார்.!

by Rajkumar |   ( Updated:2022-06-02 04:08:25  )
சூட்டிங்கிற்கு ஒழுங்காவே வர்றது இல்ல -  விஷால் மீது குவியும் புகார்.!
X

தமிழ் திரையுலகில் வெகு நாட்களாக ட்ரெண்டில் இருந்து வரும் முக்கிய நடிகர் விஷால். சமீபத்தில் இவர் நடித்த எனிமி திரைப்படம் வெகுவாக பேசப்பட்டது. ஆர்யாவும், விஷாலும் சரிக்கு சமமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஆனால் விஷால் சரியாக சூட்டிங்கிற்கே வருவதில்லை என்கிற புகார் திரைத்துறையினரே இருக்கிறது. இதனால் பட வேலைகள் தாமதப்படுகிறதாம். மேலும் அதிக பண விரயம் ஆகிறது என படக்குழுவினர் கவலை தெரிவிக்கின்றனராம்.

ஆனால் நடிகர் விஷால் , எவ்வளவு நஷ்டம் ஆகிறதோ அதை தனது சம்பளத்தில் இருந்து கழித்துக்கொள்ளுமாறு கூறுகிறாம். தற்சமயம் விஷால் நடித்து வரும் பேன் இந்தியா படமான லத்தி திரைப்படத்திலும் இயக்குனர் வினோத் குமார் இதே பிரச்சனையை சந்தித்தாராம்.

இன்னும் 25 நாட்கள் ஹூட்டிங் இருக்கும் நிலையில் படம் வெளியீட்டு தேதியை அறிவித்ததாம் படக்குழு. அப்போவாவது விஷால் துரிதமாக நடித்துக்கொடுப்பார் என்கிற எண்ணத்தில் இந்த வேலையை செய்துள்ளது படக்குழு.

லத்தி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Next Story