கிளுகிளுப்பு இயக்குனர் படத்தில் விஷால்….ஆனா இது வேற மாதிரியாம்!…..

Published On: October 19, 2021
| Posted By : சிவா
vishal

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இருந்ததால் ஜொள்ளு பார்ட்டிகள் இப்படத்தை விரும்பி பார்த்தனர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடித்தனர்.

adhik ravichandran

இப்படத்திற்கு பின் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் சிம்பு செய்த சொதப்பலால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதன்பின் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.

தற்போது விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இது கிளுகிளுப்பான படம் இல்லையாம். விஷாலுக்கு ஏற்றபடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகவுள்ளதாம்.