Connect with us
banner

கிடைச்ச வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள தவறிய விஷால்…! உங்க குறிக்கோளுதான் என்ன மிஸ்டர் துப்பாறிவாளன்..?

vishal_main_cine

Cinema News

கிடைச்ச வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள தவறிய விஷால்…! உங்க குறிக்கோளுதான் என்ன மிஸ்டர் துப்பாறிவாளன்..?

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து இப்பொழுது அந்த இடத்தை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகர் விஷால். தொடர்ச்சியான தோல்வி படங்களையே கொடுத்த விஷால் தன்னுடைய இமேஜை இழந்து விட்டார் என்றோ கூறலாம். ஆரம்பத்தில் சில கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த விஷால் அடுத்த அடுத்த தோல்விகளால் படவாய்ப்புகளின்றி காணப்படுகிறார்.

vishal1_cine

மேலும் நடிகர் சங்க தேர்தல், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என ஈடுபடுத்தி கொண்டு வரும் விஷால் தற்சமயம் இரண்டு மூன்று படங்களை கையில் வைத்து சுற்றி வருகிறார். இருந்தாலும் அந்த பட சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் போகாமலும் இடை இடையே எங்கேயாவது சென்றும் விடுகிறாராம்.

vishal2_cine

சரி மற்ற இயக்குனர்களிடம் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் அவரின் நண்பரான நந்தா நடிக்கும் படமான லத்தி படத்திலும் நடிக்கிறாராம். அந்த பட சூட்டிங்கிற்கும் இப்படி தான் செய்கிறாராம். என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வந்த படக்குழு லத்தி படத்தின் ரிலீஸ் தேதியை விஷாலுக்கு தெரியாமல் அறிவித்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். அப்பொழுதுதான் விரைவில் வந்து நடித்து கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளார்களாம் படக்குழு. இருக்கிற வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் விஷாலை விமர்சித்து வருகின்றனர் சினிமா வட்டாரங்கள்.

vishal3_cine

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top