மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் பிரபலம்.. நடுவில் புகுந்து குளறுப்படி செய்த எஸ்.ஜே.சூர்யா!

Published on: September 22, 2023
---Advertisement---

Mark Antony: தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹிட் பட்டியலில் இணைந்து இருக்கும் மார்க் ஆண்டனி படம். பல வருடம் கழித்து விஷாலுக்கு வெற்றி படமாகவும், வசூலில் 100 கோடியையும் தாண்டிய நிலையில் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் மார்க் ஆண்டனி. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகி இருந்த மார்க் ஆண்டனி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஷாலுக்கும் இப்படம் ரொம்ப வருடங்கள் கழித்து ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

இப்படத்தில் அப்பா, மகனாக விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். அதிலும் எஸ்.ஜே.சூர்யா ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் என இரு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் ஆதிக் முதலில் விஷாலின் கேரக்டரை மட்டுமே இரட்டை வேடமாக முடிவு செய்து இருந்தாராம்.

இந்த கதையில் வரும் மதனுக்காக அனுராப் கஷ்யப்பை நடிக்க வைக்கவே ஆதிக் திட்டமிட்டு இருந்து இருக்கிறார். ஆனால் கதையை எஸ்.ஜே.சூர்யாவிடம் சொன்ன போது அவரே தானே மதனாகவும் நடிப்பதாக கேட்டாராம். ஆதிக்கும் இருவரும் இரட்டை ரோல் செய்தால் நன்றாக இருக்கும் என உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானால் பறிபோன படவாய்ப்பு.. காலை வாரிய துருவ் விக்ரம்.. ஹிட்டு கொடுத்தும் புலம்பும் இயக்குனர்…

படம் வெளியாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. 100 கோடி வசூலை பெற்று இருப்பதாக விஷால் சமீபத்தில் நடந்த வெற்றி விழாவில் பேசி இருந்தார். மேலும் தளபதி விஜயிற்கும் நன்றி தெரிவித்தார். அதேப்போல இயக்குனர் ஆதிக் இப்படத்தின் வெற்றியை அஜித்துக்கு சமர்பிப்பதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.