கட்டிடம் கட்டியாச்சு.. கல்யாணம் எப்போ? திருமணம் குறித்து விஷால் கொடுத்த அப்டேட்

by Rohini |   ( Updated:2025-05-01 06:23:22  )
Vishal_new
X

Vishal_new

Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் நடித்தே மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக அர்ஜூனிடம்தான் வேலை செய்தார் விஷால். அர்ஜுனின் சிபாரிசு காரணமாகத்தான் செல்லமே படத்தில் ஹீரோவாக நடிக்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

நடிகராக இருந்தாலும் சமூக சேவை மனப்பாண்பு கொண்டவர் விஷால். அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். தயாரிப்பு சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக தற்போது இருந்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகே தன்னுடைய கல்யாணம் என இருந்த விஷால் இப்போது வரை திருமணம் செய்யாமலேயே இருக்கிறார்.

இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சங்க கட்டிடம் எப்போது என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விஷால் ஒரு கருத்தை நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 9 வருடம் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் கட்டிட திறப்பு விழாவிற்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் டெக்னீசியன்கள் வரை அனைவரையும் நானே வந்து தனித்தனியாக அழைப்பேன்.

அனைவரும் பட்டுவேட்டி, சேலை அணிந்து ஒரு குடும்ப விழாவாக நினைத்து வரவேண்டும் என கூறினார்.மேலும் ஜூலை மாதம் எப்படியாவது கட்டிடத்தை திறந்து விடுவோம். ஆனால் என் கல்யாணம் எப்போ நடக்கும்னு எனக்கு தெரியாது என விஷால் கூறினார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் வருடத்திற்கு நான்கு படங்களில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் போட போகிறேன் என்றும் விஷால் மிகபெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

Next Story