மிஷ்கின் எனக்கு செஞ்சது துரோகம்!.. என்னைக்கும் மறக்க மாட்டேன்!.. விஷால் காரசார பேட்டி!..
தமிழ் சினிமாவின் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் விஷால் பத்திரிக்கையாளர்களிடம் தன் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இதுவரை ஒரு உயர் அதிகாரியாக போலீஸ் வேடத்தில் சில படங்களில் நடித்து வந்த விஷால் லத்தி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்து எதிரிகளிடம் இருந்து ஒரு 10 வயது பையனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : முதல்வரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் விஷால்??… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…
லத்தி வருகிற 22 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. வெவ்வேறு ஊர்களுக்கு புரோமோஷனுக்காக பயணம் செய்யும் விஷால் நேற்று கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடம் வெவ்வேறு வகையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
திருமணம் பற்றி கேட்டதற்கு கட்டிடம் கட்டிய பிறகே எனது திருமணம் என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் இயக்குனர் மிஷ்கினுடன் உங்களுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் ஒரு தயாரிப்பாளராக தான் பிரச்சினை என்று கூறினார். மேலும் மிஷ்கிம் ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர். ஆனால் எனக்கு செஞ்சது மிகப்பெரிய துரோகம். எனக்கு செஞ்ச துரோகத்தை வேறெந்த தயாரிப்பாளருக்கும் செய்யக் கூடாது என்று தான் கூறி வருகிறேன். இருந்தாலும் அந்த துரோகத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றும் விஷால் காரசாரமாக கூறினார்.