விஷாலை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்.! உச்சகட்ட கோபத்தில் சினிமா பிரபலம்.!

by Manikandan |
விஷாலை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்.! உச்சகட்ட கோபத்தில் சினிமா பிரபலம்.!
X

விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் போதிய வரவேற்ப்பை பெற தவறி வருகின்றன. அதனால், அவரது அடுத்தடுத்த படங்களுக்கு சில சிக்கல்கள் எழுந்து வருகிறது. ஒரு சில படங்கள் டிராப் என கூட செய்திகள் வெளியாகி வருகிறது.

அப்படித்தான் அண்மையில் அறிவிக்கப்பட்ட அதுவும் பிரமாண்டமாக விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படம் என அறிவிக்கப்பட்ட ஒரு படம் டிராப் என தகவல் வந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

vishal

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படம் ஆரம்பித்த முதலே இப்படத்திற்கு பல தடங்கல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்க்கு சரியாக விஷால் கால்ஷீட் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையும் படியுங்களேன் - அஜித்துக்கு ஒரு நியாயம்.! விஜய்க்கு ஒரு நியாயமா.?! இதெல்லாம் ரெம்ப அநியாயம் பாஸ்.!

அதன் பிறகு தயாரிப்பாளருக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விஷால் இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் மிகவும் கோபமாகிவிட்டாராம். விஷாலால் எனக்கு நிறைய பணம் நஷ்டமாகிவிட்டது. அவரை நான் சும்மா விடமாட்டேன் என தனது நெருங்கிய வட்டாரங்களில் தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.

விஷால், நடிப்பில், அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படமும் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

Next Story