புரட்சி தளபதி ஆசையில் மண்ணை போட்ட அப்பா!... நண்பரால் எல்லாம் மாறிய சூப்பர் சம்பவம்…

சண்டக்கோழி படம் விஷால் மற்றும் லிங்குசாமி என இரண்டு பேரின் சினிமா பயணத்திலும் முக்கியமான மைல்கல்லை ஏற்படுத்திய படம். நடிகராவதற்கு முன்பே விஷாலுக்கும் லிங்குசாமிக்கும் நட்பு இருந்திருக்கிறது.

ஆனந்தம், ரன் என மிகப்பெரிய ஹிட் கொடுத்த லிங்குசாமி அடுத்ததாக அஜித்துடன் இணைந்து பணியாற்றிய ஜி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அத்துடன் அவரது சினிமா பயணத்தையே கேள்விக்குள்ளாகியது. அந்த சூழ்நிலையில் லிங்குசாமி உருவாக்கிய கதைதான் சண்டக்கோழி.

இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!

ஆரம்பத்தில் இந்தக் கதையை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தின் இரண்டாவது பாதியில் ராஜ்கிரண் கேரக்டரின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கருதிய விஜய், முழுக் கதையையும் கேட்காமலேயே நிராகரித்திருக்கிறார். அதன்பிறகே விஷால் இந்தப் படத்துக்குள் வந்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் செல்லமே படம் மூலம் அறிமுகமாகியிருந்த விஷால், பக்கா கமர்ஷியல் படத்துக்காகக் காத்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் இருவரும் இணைந்து அடித்த பெரிய ஹிட்தான் சண்டக்கோழி. இந்தப் படம் விஷாலை தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநயகர்கள் பட்டியலில் கொண்டுபோய் சேர்த்தது.

இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தமிழ், தெலுங்கில் பல படங்களையும் தயாரித்திருக்கிறார். விஷூவல் கம்யூனிகேசன் முடித்து இயக்குநராகும் முடிவில் அர்ஜூன் இயக்கிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் விஷால். ஆனால், மகன் ஹீரோவாக வேண்டும் என்று விரும்பிய ஜி.கே.ரெட்டி செல்லமே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அதன்பிறகே சண்டக்கோழி பட வாய்ப்பு வந்திருக்கிறது. விஷாலுக்கு பெரும் திருப்புமுனையைத் தந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இயக்குநர் லிங்குசாமியும் விஷாலும் அதற்கு முன்பிருந்தே நண்பர்களாம். ஜி.கே.ரெட்டி தயாரித்த 'மகாபிரபு’ படத்தில் லிங்குசாமி உதவி இயக்குநர். அப்போது விஷால் பள்ளி மாணவர். அப்போதிருந்தே இருவருக்குமிடையே நட்பு இருந்திருக்கிறது.

Related Articles
Next Story
Share it