Categories: latest news

புரட்சி தளபதி ஆசையில் மண்ணை போட்ட அப்பா!… நண்பரால் எல்லாம் மாறிய சூப்பர் சம்பவம்…

சண்டக்கோழி படம் விஷால் மற்றும் லிங்குசாமி என இரண்டு பேரின் சினிமா பயணத்திலும் முக்கியமான மைல்கல்லை ஏற்படுத்திய படம். நடிகராவதற்கு முன்பே விஷாலுக்கும் லிங்குசாமிக்கும் நட்பு இருந்திருக்கிறது.

ஆனந்தம், ரன் என மிகப்பெரிய ஹிட் கொடுத்த லிங்குசாமி அடுத்ததாக அஜித்துடன் இணைந்து பணியாற்றிய ஜி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அத்துடன் அவரது சினிமா பயணத்தையே கேள்விக்குள்ளாகியது. அந்த சூழ்நிலையில் லிங்குசாமி உருவாக்கிய கதைதான் சண்டக்கோழி.

இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!

ஆரம்பத்தில் இந்தக் கதையை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தின் இரண்டாவது பாதியில் ராஜ்கிரண் கேரக்டரின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கருதிய விஜய், முழுக் கதையையும் கேட்காமலேயே நிராகரித்திருக்கிறார். அதன்பிறகே விஷால் இந்தப் படத்துக்குள் வந்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் செல்லமே படம் மூலம் அறிமுகமாகியிருந்த விஷால், பக்கா கமர்ஷியல் படத்துக்காகக் காத்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் இருவரும் இணைந்து அடித்த பெரிய ஹிட்தான் சண்டக்கோழி. இந்தப் படம் விஷாலை தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநயகர்கள் பட்டியலில் கொண்டுபோய் சேர்த்தது.

இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தமிழ், தெலுங்கில் பல படங்களையும் தயாரித்திருக்கிறார். விஷூவல் கம்யூனிகேசன் முடித்து இயக்குநராகும் முடிவில் அர்ஜூன் இயக்கிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் விஷால். ஆனால், மகன் ஹீரோவாக வேண்டும் என்று விரும்பிய ஜி.கே.ரெட்டி செல்லமே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அதன்பிறகே சண்டக்கோழி பட வாய்ப்பு வந்திருக்கிறது. விஷாலுக்கு பெரும் திருப்புமுனையைத் தந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இயக்குநர் லிங்குசாமியும் விஷாலும் அதற்கு முன்பிருந்தே நண்பர்களாம். ஜி.கே.ரெட்டி தயாரித்த `மகாபிரபு’ படத்தில் லிங்குசாமி உதவி இயக்குநர். அப்போது விஷால் பள்ளி மாணவர். அப்போதிருந்தே இருவருக்குமிடையே நட்பு இருந்திருக்கிறது.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago