முதல்வரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் விஷால்??... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

Vishal
நடிகர் விஷால் தற்போது “லத்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் விஷால் “மார்க் ஆண்டனி” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “துப்பறிவாளன் 2” திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார்.

Laththi
நடிகர் விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து அதே ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாமினேஷன் தாக்கல் செய்தார். ஆனால் சில குளறுபடிகள் காரணமாக அவரது நாமினேஷன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சமீபத்தில் “லத்தி” திரைப்படத்தின் புரொமோஷன் ஒன்றில் பேசிய விஷால், அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு மேடையில் நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்களிடையே பெரும் கூச்சலும் உற்சாகமும் ஏற்பட்டது. அப்போது விஷால் “தளபதி 67 திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை” என கூறினார்.

Vishal
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள “தளபதி 67” திரைப்படத்தில் விஷால் நடிக்க உள்ளார் என சமீப நாட்களாக பல செய்திகள் உலா வந்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.
மேலும் அந்த விழாவில் பேசிய விஷால் “நானும் ஒரு நாள் இயக்குனர் ஆவேன், விஜய்க்கு கதை சொல்லுவேன்” என லோகேஷ் கனகராஜ்ஜிற்கு சவால் விடும்படி கூறினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஷால், தன்னை குறித்து வலம் வந்த ஒரு வதந்தியை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

Vishal
“ஆந்திராவின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் நான் போட்டியிடப்போவதாக ஒரு வதந்தி வந்தது. அதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உண்மையிலேயே குப்பம் பகுதியில் 3 வருடங்களாக எனது தந்தையின் கிரானைட் தொழிலை கவனித்து வந்தேன். இந்த விஷயத்தை எல்லாம் சேர்த்து ஒரு கட்டுரையையே எழுதியிருந்தார்கள்.
குப்பம் பகுதியில் உள்ள அனைத்து இடங்களும் எனக்கு அத்துப்பிடி. அங்குள்ள தொழிலாளர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். இந்த அரிய விஷயங்களை எல்லாம் அந்த கட்டுரையில் எழுதியிருந்தார்கள். இந்த தகவல்களை எல்லாம் எப்படி சேகரித்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என அப்பேட்டியில் விஷால் கூறியிருந்தார்.