தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஷால், “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே சினிமா ரசிகர்களிடம் ஒரு ஹீரோவாக மனதில் பதிந்துப்போனார் விஷால்.
“செல்லமே” திரைப்படத்தை தொடர்ந்து “சண்டக்கோழி”, “திமிரு”, “சிவப்பதிகாரம்” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்த விஷால், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாக உருவானார். குறிப்பாக ரசிகர்களின் மத்தியில் ஒரு ஆக்சன் ஹீரோவாக பெயர் பெற்றார் விஷால்.
மேலும் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது.
விஷால் சமீபத்தில் நடித்து வரும் பல திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிபெறவில்லை. கடந்த 22 ஆம் தேதி வெளியான “லத்தி” திரைப்படத்திற்கு கூட கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, இது வரை யாரும் அறியாத ஒரு தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு விஷால், ரீமா சென், ஸ்ரியா ரெட்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திமிரு”. இத்திரைப்படத்தை தருண் கோபி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவை டார்ச்சர் செய்த வயதான காதலன்… தற்கொலைக்கு காரணமாக அமைந்த சம்பவம் என்ன தெரியுமா??
இந்த நிலையில் அப்பேட்டியில் கலந்துகொண்ட விஷால் “திமிரு பட இயக்குனர் தருண் கோபிக்கு அந்த நேரத்தில் எப்படி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றே தெரியாது. நான் அவரிடம் மாட்டிக்கொண்டேன் என 8 ஆவது நாளிலேயே தெரிந்துவிட்டது. வேறு வழி இல்லாமல் அந்த படத்தை நான்தான் இயக்கவேண்டியதாக போய்விட்டது” என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…