Connect with us

Cinema News

விஷால் என்ன இப்படி மாறிட்டாரு?.. ஹீரோயினை விட்டுட்டு அந்த நடிகரைத் தான் சைட் அடிப்பாராம்!

மார்க் ஆண்டனி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால் தான் ஹீரோயின்களை விட அதிகமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவைத் தான் சைட் அடிப்பேன் என பேசி அரங்கையே அதிர வைத்து விட்டார்.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்கிற காவிய காதல் கதை படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் முதல் முறையாக டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மார்க் மகனாகவும் அவரது அப்பன் ஆண்டனி என இரட்டை வேடத்தில் இந்த படத்தில் விஷால் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவும் அப்பா, மகன் என டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ளாராம்.

மார்க் ஆண்டனியாக மிரட்டுவாரா விஷால்:

கடந்த 2018ல் வெளியான இரும்புத்திரை திரைப்படம் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்‌ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட 7 படங்கள் தொடர்ந்து எதிர்பார்த்த வெற்றி பெறாமல் சொதப்பி வருகின்றன.

இந்நிலையில், திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை ரொம்பவே நம்பி உள்ளார். நிச்சயம் இந்த படம் முந்தைய படங்கள் போல சொதப்பாமல் ஹிட் அடிக்கும் என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

மாநாடு படத்தை போல:

மாநாடு படத்தில் கடைசியாக டைம் லூப் கான்செப்ட் பயன்படுத்தப்பட்ட நிலையில், மார்க் ஆண்டனி படத்தில் டைம் மெஷின் கான்செப்ட் உடன் கேங்ஸ்டர் கதையையும் கொஞ்சம் மெர்சல் படத்தின் கதையையும் உட் சொருகி மார்க் ஆண்டனியை உருவாக்கி உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன் என ட்ரோல்கள் வந்தாலும், இந்த படம் கமர்ஷியலாக வெற்றிபெறும் என படக்குழு பலமாக நம்புகிறது.

மெர்சல் மற்றும் மாநாடு படங்களில் நடித்த எஸ்.ஜே. சூர்யாவையே இந்த படத்திலும் வில்லனாக ஆதிக் ரவிச்சந்திரன் போட்டிருப்பது தான் ஹைலைட்டே என்கின்றனர்.

எஸ்.ஜே. சூர்யாவை தான் சைட் அடிப்பேன்:

எஸ்.ஜே. சூர்யாவுடன் இந்த படத்தில் 100 நாட்கள் ஒன்றாக வொர்க் பண்ணியிருக்கேன். எப்போதுமே, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், ஷாட் என்று வந்தால் 8 விதமான வெரைட்டி நடிப்பைக் கொடுத்து மெய் சிலிர்க்க வைத்து விடுவார். இந்த மனுஷனை இப்போ இல்லை, 27 வருஷமா பார்த்துட்டு இருக்கேன். இதை போலத்தான் அதே வெறித்தனமாக இப்போவும் மனுஷன் ஓடிக் கொண்டிருக்கிறார் என பாராட்டினார் விஷால்.

நான் கல்லூரியில் படிக்கும் போதே, காலேஜுக்கு எஸ்.ஜே. சூர்யா வந்தால், ஹீரோயின்களை எல்லாம் விட்டு விட்டு அவரைத்தான் சைட் அடிப்பேன் என்று பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது. மார்க் ஆண்டனி படத்தை எஸ்.ஜே. சூர்யாவுக்காக கண்டிப்பாக பார்க்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top