விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..

by Saranya M |   ( Updated:2024-01-19 21:34:21  )
விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..
X

நடிகரும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்த நிலையில், நடிகர் சங்கத்தை சேர்ந்த விஷால், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்து வந்த நிலையில், ஜனவரி 19ம் தேதி விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கம் சார்பாக கடைசியாக மேடை ஏறி பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் விஜயகாந்த் பெரிய நடிகராக இருந்த காலக்கட்டத்தில் பல இளைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி முன்னணி ஹீரோக்களாக மாற்றினார்.

இதையும் படிங்க: சங்க சகவாசமே வேண்டாம்!.. விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியை புறக்கணித்த ரஜினிகாந்த், விஜய், அஜித்!

அவர் செய்ததை போலவே நானும் விஜயகாந்தின் மகனான தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நடிக்க முழு மனதுடன் சம்மதிக்கிறேன். கேப்டன் சாமி எப்பவும் நம்ம கூடவே இருப்பாரு என பேசினார்.

விஷால் சும்மா பேச்சுக்கு சொல்லி விட்டு மறந்து விடப் போகிறார் என நினைத்தாரா என தெரியவில்லை. கடைசியாக சண்முக பாண்டியன் பேசும் போது விஷால் அண்ணா நன்றி அண்ணா நீங்க கொடுத்த ஆஃபருக்கும் நன்றி என நினைவுப்படுத்தினார்.

இதையும் படிங்க: ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..

விஷாலின் பேச்சை பார்த்த நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் நடிக்க அழைத்த போதே விஷால் வரவில்லை. விஜயகாந்த் மகன் படத்தில் எல்லாம் நடிப்பாரா? எல்லாமே சும்மா மேடை பேச்சு மட்டும் தான் என கலாய்த்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ், விஷால் என இரு நடிகர்கள் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோல் இருந்தாலும் சரி அல்லது முழு படத்திலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தாலும் சரி நடிக்கிறோம் என சொல்லி உள்ளனர். நடிகர் சங்க கட்டடம் போல இது நடக்க எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என பார்ப்போம் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Next Story