அண்ணே என்னை மன்னிச்சிடுங்கண்ணே!.. கதறி அழுது வீடியோ போட்ட விஷால்….

Published on: December 28, 2023
vishal
---Advertisement---

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் மரணமடைந்த செய்தி எல்லோருக்கும் இடிபோல இறங்கியது. இவ்வளவு நல்ல மனம் கொண்ட, இவ்வளவு தர்மங்கள் செய்த, மனிதாபிமானம் மிக்க இந்த மனிதரா இறந்துபோய்விட்டார் என பலரும் சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நல்ல மனிதர், எல்லோரிடமும் அன்பாக பழகுவார்.. எல்லோரையும் பசியார வைத்து அதில் சந்தோஷப்படுவார். எல்லோரையும் சமமாக நடத்துவார்.. மிகவும் எளிமையான மனிதர்.. வெள்ளந்தி குணம் கொண்டவர்… மனதில் பாசாங்கு இல்லாமல், உள்ளொன்று புறமொன்று வைத்து பேசாதவர் என்கிற பெயர்தான் அவருக்கு எப்போதும் நிலைத்திருக்கிறது.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..

150 படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த் 2015ம் வருடத்திற்கு பின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு அவரால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை.

எழுந்து நிற்க முடியாமலும், பேச முடியாமலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட முடியாதவர்களாக அவர் இருந்ததுதான் பெரும் சோகம். இந்நிலையில்தான் நேற்று நள்ளிரவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

vishal

இவருக்கு திரையுலினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் நியுயார்க்கில் இருக்கும் நடிகர் விஷால் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘அண்ணே முதல்ல என்ன மன்னிச்சிடுங்கண்ணே.. இப்ப நான் உங்க கூட இருந்திருக்கணும். நடிகர் சங்க விஷயத்துல நீங்கதான் எனக்கு ரோல் மாடல். உங்களை பத்தை பலரும் பல விஷயங்களை சொல்லி கேள்வி பட்டிருக்கேன். அப்படி நானும் இருக்கணும்னு நினைச்சிருக்கேன். உங்க காலை தொட்டு கும்பிடனும்னு நினைக்கிறேன். உங்க ஆத்மா சாந்தி அடையட்டும்’ என விஷால் அழுது கொண்டே பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.