சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், முன்னணி நடிகை ஒருவர் குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தது சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
விஷால் வெளியிட்ட அந்த வீடியோவில்
வணக்கம் சி.வி. சண்முகம் சார்… சமீபத்தில் எங்கள் திரையுலகைச் சேர்ந்த ஒரு முன்னணி நடிகையை நீங்கள் மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளீர்கள். இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படி கண்டனம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை நீங்கள்தான் உங்கள் பேச்சின் மூலம் ஏற்படுத்தியுள்ளீர்கள்.”
ஒரு சாதாரண மனிதனாக, ஒரு வாக்காளனாக, சமூக அக்கறை கொண்ட ஒரு குடிமகனாக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக நான் உங்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு நடிகை குறித்து மிகவும் கொச்சையாகப் பேசியுள்ளீர்கள். அவர் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு முன்னணி நடிகை மேலும் அவர் ஒரு குடும்பத் தலைவியும் கூட. அவரைப் பற்றி இப்படிப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?” எதற்காக இப்படிப் பேசினீர்கள்? கூட்டத்தில் கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக ஒருவரைக் கொச்சைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. அதற்குப் பதிலாக, நீங்கள் மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களைச் செய்யப் போகிறீர்கள் என்பதை அறிவித்து, அதன் மூலம் கைதட்டல் வாங்கினால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.”
மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆட்சியில் நீங்கள் சிறைத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளீர்கள். அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் தவறான ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை விட, இதுபோன்ற பேச்சுகளின் மூலம் உங்களுக்கான மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன் என விஷால் அந்த வீடியோவில் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…