அந்த வருஷம் வாழ்க்கை மோசமா போச்சி.. பைத்தியமே புடிச்சிடுச்சி.. புலம்பும் விஷால்

vshal engagement
செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2004-ம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம், தோரணை, அவன் இவன், வெடி உள்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் தோல்விப்படமாக இருக்கிறது. அயோக்யா, ஆக்சன்,எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. எனிமி திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தாலும் அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

vishal
அந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார். இருந்தாலும் படம் சுமார் என்று தான் சொல்லப்பட்டது. அடுத்தடுத்த தோல்வி படங்களால் துவண்டு போன விஷால், அடுத்து வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருந்ததால், லத்தி படத்திற்காக கடுமையாக உழைத்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்தது. 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

vishal 02
2019ம் வருடம் வாழ்க்கையில் மிகவும் மோசமான வருஷம், அனிஷாவை நான் காதலித்தேன் அதன் பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். திருமணம் நின்றதால், எனக்கு நானே பல முறை பேசிக்கொள்வேன். அதனால் என்னை பலர் பைத்தியம் என்று நினைத்தனர். எனக்கான நேரம் வரும். எந்த காரியத்தையும் தைரியமாக துணிச்சலுடன் போராடி முடிப்பவன் நான். என் திருமணம் நின்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை எனக்கான நேரம் வரும் அதுவரை காத்திருப்பேன். நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்தவுடன் என் திருமணம் குறித்து நிச்சயம் உங்களுக்கு சொல்லுவேன் என்றார்.