விஜயால் வந்த சோதனை!.. வேதனையில் போட்ட ட்விட்டை நிமிஷத்தில் அகற்றிய விஷால்!.. என்ன நடந்துச்சோ?..
தமிழ் சினிமாவில் நடிகர்ளுக்கு இருக்கும் போட்டிகள் எந்த அளவுக்கு உண்மை என்று அறியாத பட்சத்தில் முக்கிய நடிகர்களின் ரசிகர்களால் மற்ற நடிகர்களின் கோபமும் வெறுப்பும் அதிகமாகி விடுகின்றது. இந்த நிலைமை இப்பொழுது மட்டுமில்லை எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நிலவி வருகின்றது.
இதற்கு பின் இருக்கும் உண்மையை நடிகர்கள் புரிந்து கொண்டால் ஒழிய அவர்களுக்குள் எந்த போட்டியும் பொறாமையும் ஏற்படாது. அப்படி ஒரு நிகழ்வு தான் அண்மையில் நடந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால்.
இவரின் லத்தி திரைப்படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வரவிருக்கிறது. சத்யம் சினிமாவில் பிரம்மாண்டமான பேனருடன் லத்தி திரைப்படம் அமைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் சில நாள்களிலேயே அதை தூக்கிவிட்டு வாரிசு படத்தின் பேனரை அமைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : இணையத்தில் வைரலாகும் அஜித் பேமிலி போட்டோ…ஆனா, தல ஹேர்ஸ்டைல் பத்தி நாங்க பேசமாட்டோம்…
இதை பார்த்த நடிகர் விஷால் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தாராம். ஆனால் கூடிய சீக்கிரமே அவர் போட்ட பதிவை நிமிஷத்தில் அழித்து விட்டாராம். ரசிகர்களை பற்றி தான் தெரியுமே. எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் ரசிகர்களின் கண்ணில் படாமலா போயிருக்கும்.
விஷால் அழித்த பதிவிற்கு பின் சில காரணங்கள் இருக்கலாம் என்றும் அல்லது யார் மூலமாவது அவருக்கு இடையூறு வந்திருக்கலாம் எனவும் கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றனர். முக்கியமாக என்னவென்றால் விஷால் லோகேஷின் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். ஒரு வேளை அதை வைத்து கூட கார்னர் பண்ணியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.