நடு இரவில் இளம்பெண்ணுடன் விஷால்.. கசிந்த வீடியோ..! என்னங்க நீங்களே இப்படியா? கலாய்க்கும் ரசிகர்கள்..!

Published on: December 26, 2023
---Advertisement---

Vishal: தமிழ் சினிமாவில் பல வருடமாக திருமணம் செய்யாமல் சுற்றி வரும் முக்கிய நடிகர் என்றால் அது விஷால் தான். அவரின் காதல் யாருடன் எப்போ என ரசிகர்கள் ஆவலாக வெயிட் செய்து வரும் நிலையில் தற்போது அவரின் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

அர்ஜூனின் வேதம் படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் விஷால். அங்கு அவரை கண்ட மற்றொரு இயக்குனரின் சிபாரிசில் அவருக்கு செல்லமே படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்து கொண்டார். முதல் படமே அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இதையும் படிங்க: போண்டா மணி சாவுக்கு கூட போகாத வடிவேலு… நடந்தது இதுதான்!.. ஷாக்கா இருக்கே!..

இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி மற்றும் திமிரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷாலை ஆக்‌ஷன் நாயகன் என்னும் அவதாரம் எடுக்க வைத்தது. தொடர்ந்து நடித்து கொண்டே நடிகர் சங்க தேர்தலில் கலந்து கொண்ட இவரின் டீம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றார். இப்படி விஷால் மற்றவையில் வளர்ந்து கொண்டே இருந்தாலும் அவரின் திரைப்படங்கள் பெரிய அளவில் ரீச்சை பெறவில்லை. இது ஒருபுறம் இருக்க, விஷாலுக்கும், வரலட்சுமிக்கு காதல் என்ற ஒரு தகவல் கசிந்தது. ஆனால் அதே சமயத்தில் தான் நடிகர் சரத்குமாருடன் பிரச்னை இருந்தது. நடக்குமா? நடக்காதா என பலரும் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க: வடிவேல் செஞ்ச வேலையில் ஒரு மாசம் என் மூக்குல ரத்தம்!.. காமெடிக்காக கஷ்டப்பட்ட போண்டா மணி..

இதையடுத்து தற்போது விஷால் நியூயார்க் ரோட்டில் ஒரு இளம்பெண்ணுடன் நடந்து செல்கிறார். திடீரென வீடியோ பக்கம் திரும்பி தலையை மறைத்து கொண்டு ஓடுவதன் மூலம் அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இது எதுவும் படத்தின் ப்ரோமோஷனா? இல்லை அவர் விஷாலின் காதலியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.