விஜயை வைச்சு செய்யப்போறேன்!.. பொறாமையில் பொலந்து கட்டிய விஷால்!..

by Rohini |   ( Updated:2022-12-13 00:23:38  )
vijay_main_cine
X

vijay

தமிழ் சினிமாவில் சின்ன தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். நடிகராக தயாரிப்பாளராக நடிகர் சங்க செயலாளராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவரது நடிப்பில் வருகிற 23 ஆம் தேதி ‘லத்தி’ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

vijay1_cine

vijay

இந்த படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் வெளியாகி 5 நாள்களில் ஹிந்தியிலும் ஒளிப்பரப்பப் படுகிறதாம். படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடிக்கிறார். வினோத் குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு ஆக்‌ஷன் படமாக வெளிவரவிருக்கிறது.

இதையும் படிங்க :சிவாஜிக்காக தானே இசையமைத்து பாடல் இயற்றிய தயாரிப்பாளர்.. என்ன படம் தெரியுமா?

அதற்காக படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. நேற்று நடந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டார். அவருக்கு விஷால் நன்றி சொல்லும் போது விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் கத்தி கூச்சலிட்டனர்.

vijay2_Cine

vishal

இதை புரிந்து கொண்ட விஷால் எதற்காக கூச்சலிடுகின்றனர் என்று தெரியும். மேலும் தளபதி - 67 படத்தில் நான் இல்லை. அது எனக்கே கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் லோகேஷை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது என்று விஷால் கூறினார்.

ஏனெனில் லோகேஷ் தளபதியை வைத்து படம் பண்ணப்போகிறார். நானும் ஒரு நல்ல கதையை தயார் செய்து தளபதியை வைத்து கூடிய சீக்கிரம் படம் பண்ணுவேன். ஒரு நாள் இயக்குனர் ஆவேன் . அப்பொழுது விஜய்க்கு ஒரு கதை சொல்லுவேன் என்று லோகேஷுக்கு சவால் விடுவது மாறி மேடையில் பேசினார் விஷால்.

vijay3_cine

vishal

Next Story