உங்கள 'பொண்ணு' கேட்டு வந்துருக்கோம்... வீட்டுக்கே சென்ற டாப் ஹீரோ

keerthi
Keerthi suresh: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். பல்வேறு நடிகர்களுடன் கீர்த்தியின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர் யாரையும் விரும்புவதாக சொல்லவில்லை.
சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், காதலருமான ஆண்டனி தட்டில் என்பவரை மணக்க இருப்பதாக அறிவித்தார். விரைவில் இருவரின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கீர்த்தி சுரேஷை சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்த ஒருவர் பெண் கேட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சண்டக்கோழி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெளிச்சம் பெற்ற விஷால் தான் அது. இந்த படத்தின் இரண்டாவது பார்ட்டான சண்டக்கோழி 2 படத்தை எடுக்கும்போது விஷால்-கீர்த்தி இணைந்து நடித்தனர்.
அப்போது இருவரின் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக நினைத்த விஷால் பெற்றோர் கீர்த்தி சுரேஷ் வீட்டிற்கு சென்று அவரை பெண் கேட்டுள்ளனர். இதை கேள்விப்பட்ட கீர்த்தி தான் வேறு ஒருவரை விரும்புவதாக சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.

#image_title
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நல்ல வேளை இந்த கல்யாணம் நடக்கல என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். முதலில் வரலட்சுமியுடன் கிசுகிசுக்கப்பட்ட விஷால் பின்னர் தெலங்கானா பெண் ஒருவரை நிச்சயம் செய்தார். ஆனால் அதுவும் அவருக்கு கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனோஜுக்கு கிடைத்த பல்ப்… பாக்கியாவாக மாறிய ராதிகா… பிரச்னையில் சிக்கிய கதிர்!..