மவனே எவன் ஜெயிச்சாலும் இத பண்ணுவேன்டா! சொன்னதை செய்து காட்டிய விஷ்ணு – இது வேற லெவல்

Published on: January 16, 2024
vishnu
---Advertisement---

Vishnu Vijay: விஜய் டிவியில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எழாவது சீசன். அனைவரும் எதிர்பார்த்த அர்ச்சனாதான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல அர்ச்சனா இல்லாமல் ஒரு வேளை மாயா வந்துவிடுவாரோ என்ற பயமும் இருந்தது.

ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அர்ச்சனாவிற்கே ஓட்டுப் போட்டு அவரை ஜெயிக்க வைத்திருக்கின்றனர். அடுத்த இரண்டாவது இடத்தில் மணிச்சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது இடத்திற்கு  மாயா தள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: கமலுக்கு இருந்த வைராக்கியம்.. ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…

இந்த சீசனில் மாயா இல்லாவிட்டால் வேஸ்ட் என சொல்லி வந்த நிலையில் இந்த சீசனில் மிகவும் எரிச்சலடைய வைத்த போட்டியாளரும் அவர்தான் என சில  ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் விஷ்ணு , மணி, தினேஷ் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் பழகும் விதம் அனைவரையும் கவர்ந்தது.

vishnu
vishnu

அவர்களிடம் உண்மையான நட்பு இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த  நிலையில் அர்ச்சனா ஜெயித்ததை ஒட்டி விஷ்ணு பட்டாசு வெடித்து கொண்டாடியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் விஷ்ணு அர்ச்சனாவிடம் ‘மவனே உங்கள்ல எவனாவது ஒருத்தன் ஜெயிச்சா கண்டிப்பா 1000 வாலா வெடி வெடித்து கொண்டாடுவேன்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..

அதே போல அர்ச்சனா வெற்றியை 1000 வாலா சரம் வைத்து வெடிக்கும் விஷ்ணுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொன்னதை காப்பாற்றிய விஷ்ணு என்றும் சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுப்பவர் விஷ்ணு என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.