பிக்பாஸ் விஷ்ணுவின் காதலியை பார்த்தீங்களா? 8 வருடத்திற்கு பிறகு!.. அட இவங்களா அது!?..

by Rohini |   ( Updated:2024-03-03 03:19:56  )
vishnu
X

vishnu

Biggboss Vishnu: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த பெண்களின் மனதை கவர்ந்தவராக மாறினார் விஷ்ணு. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அந்த ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் நம்மை அனைவரும் அறிய வேண்டும். நாம் யார் என்பதை நிருபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார் விஷ்ணு.

அவர் நினைத்ததை போலவெ பிக்பாஸுக்கு பிறகு விஷ்ணுவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். எங்கு போனாலும் விஷ்ணுவா என ஓடிவரும் அளவுக்கு அவருக்குண்டான மதிப்பும் உயர்ந்திருக்கிறது. அதுவும் கடைசி நாள் வரை பிக்பாஸில் இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் விஷ்ணு. பிக்பாஸில் இருக்கும் போதே ஒரு வேளை விஷ்ணுவுக்கு பூர்ணிமாவுக்கும் இடையே காதல் இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுந்தது.

இதையும் படிங்க: ரஜினியின் கேரியர் அவ்வளவு தான்… ஒரே படத்தில் போராடி மீண்டெழுந்த சூப்பர்ஸ்டார்…

அந்தளவுக்கு இருவரும் பழகினார்கள். ஒரு கட்டத்தில் விஷ்ணுவே மறைமுகமாக பூர்ணிமாவிடம் கேட்டார். ஆனால் நாள்கள் நெருங்க நெருங்க இருவருக்கும் இடையே சண்டை பற்றி எரிந்தது. இனிமேல் தயவு செய்து என்னிடம் பேசாதே என்று சொன்னார் விஷ்ணு. ஆனால் அதில் இருந்தே இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் விஷ்ணுவை ரசிகர்கள் பார்த்து ரசித்த சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல்தான். அந்த சீரியல் நல்ல ஒரு ரீச்சை அடைந்தது. ஒரு பக்கம் கார்த்திக் இன்னொரு பக்கம் சுருதி என இருவருமே ரொமான்ஸில் பிச்சி பிடலெடுத்தனர். இவர்களுக்கு இடையில் இன்னொரு காதல் ஜோடியும் டூய்ட் பாடியது. அதுதான் விஷ்ணுவும் மதுமிளாவும்தான்.

madhu

madhu

இதையும் படிங்க: ‘ஜோஷ்வா’ படத்தில் நடித்த நடிகை இந்த நடிகரின் மனைவியா? என்ன gvm இதெல்லாம் என்னனு சொல்றது

ஆஃபிஸ் சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் மாடர்ன் பொண்ணாக நடித்திருப்பார். இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது மதுமிளா திருமணம் ஆகி கனடாவில் செட்டிலாகிவிட்டாராம். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட 8 வருடத்திற்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார் மதுமிளா. மீண்டும் மீடியாக்கள் முன் தோன்றுவாரா என்பதை பார்க்க வேண்டும்.

Next Story