நான் மிஸ் பண்ணது எல்லாமே ஹிட் படமா போச்சி!.. இப்போது புலம்பும் விஷ்ணு விஷால்!...

by Akhilan |   ( Updated:2024-05-02 07:29:07  )
நான் மிஸ் பண்ணது எல்லாமே ஹிட் படமா போச்சி!.. இப்போது புலம்பும் விஷ்ணு விஷால்!...
X

VishnuVishal: சில படங்களை தவறுவிடுவது முன்னணி நாயகர்களுக்கு கொஞ்சம் கடுப்பான விஷயம் தான். ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 9 சூப்பர்ஹிட் படங்களை மிஸ் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணுவிஷால். இப்படம் கொடுத்த வரவேற்பால் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என ஹிட் படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

அவர் தேர்வு செய்த படங்கள் நல்ல கதையாக அமைந்ததாலும், விஷ்ணு விஷாலின் கேரியரில் நிறைய படங்களை மிஸ் செய்து இருப்பதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, நான் முதலில் பண்ண வேண்டிய திரைப்படம் நான். அதுக்கு நிறைய உழைத்தேன்.

ஆடிஷனில் ஓகேயாகி இருந்தாலும் பின்னர் வேண்டாம் என்றனர். அதையடுத்து டிஷ்யூம் படம். அதிலும் பேசி இருந்தேன். முதலில் பாசிட்டிவாக சொல்லி இருந்தாங்க. பின்னர் வேண்டாம் எனக் கூறிவிட்டனர். சென்னை28க்கு ஆடிஷன் கொடுத்து இருந்தேன். கிரிக்கெட் விட்டு ஆறு வருஷம் சினிமாவில் முயற்சி செய்தேன். 9 முக்கிய படங்களை விட்டு இருக்கேன். எனக்கு ஹீரோ முகம் இல்லை.

இதையும் படிங்க: வெறும் செட் போட்டு பிரம்மாண்டம்னு பேர் எடுத்தவர் இல்ல ஷங்கர்! அவரை பற்றி தெரியாத ஒரு விஷயம்

Next Story