அந்த மாதிரி போட்டோவை வெளியிட சொன்னது என் மனைவி தான்.. ஷாக் தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்...
தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தினை ரிலீஸ் செய்ய சொன்னது என் மனைவி தான் விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார்.
சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தான் விஷ்ணு விஷால் நடிகராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தினை கொடுத்தது. முண்டாசுப்பட்டி, குள்ளநரி கூட்டம், ஜீவா உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் மிகப்பெரிய வசூலை பெறவில்லை.
வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பில் வித்தகரான விஷ்ணு விஷாலின் சமீபத்திய ஹிட் படமாக பார்க்கப்பட்டது எஃப்.ஐ.ஆர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் பல இடங்களில் சர்ச்சையையும் கிளப்பியது. மலேசியா, குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் பட வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
அடுத்த இவர் நடிப்பில் கட்ட குஸ்தி படம் வெளியாக இருக்கிறது. திரை வாழ்க்கை இப்படி சென்று கொண்டு இருக்க தனது சொந்த வாழ்க்கையிலும் நிறைய ரிஸ்க்கை விஷ்ணு விஷால் எடுத்து வருகிறார். நடிகர் கே.நட்ராஜின் மகள் ரஜினி நட்ராஜை விஷ்ணு விஷால் நான்கு வருடம் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் 2 டிசம்பர் 2010 அன்று சென்னையில் நடந்தது. இத்தம்பதிக்கு 5 வயதில் மகன் இருக்கிறார். ஆனால் சில காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து செய்தது. தொடர்ந்து விஷ்ணுவுக்கும் பாட்மிண்டன் வீராங்கனையான ஜவாலா குட்டாவுக்கும் செப்டம்பர் 2020ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் ஏப்ரல் 22, 2021 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தற்போது இரண்டாவது மனைவியுடன் இருக்கும் விஷ்ணு சமீபத்தில் அரை நிர்வாண புகைப்படத்தினை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்தனர். இதுகுறித்து தற்போது பேசி இருக்கும் விஷ்ணு, அந்த புகைப்படம் இப்போ எடுத்தது இல்லை. அது எடுத்து இரண்டு வருடமாகி விட்டது.
எனக்கு போட விருப்பம் இல்லாமல் வைத்திருந்தேன். அப்போது தான் ரன்வீர் சிங் புகைப்படம் வந்தது. அதை பார்த்த என் மனைவி அவங்க செய்யும் போது நாம மட்டும் ஏன் செய்யாமல் இருக்க வேண்டும். பொண்ணுங்க இப்படி புகைப்படம் போடுறாங்களா. பசங்க பண்ணா மட்டும் ஏன் தப்பா? எனக் கேட்டார்.
இதையும் படிங்க: ராட்சசன் படத்துல முதலில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட ஹீரோ யார் தெரியுமா?
அதை தொடர்ந்து தான் நான் அந்த புகைப்படங்கள் என் சமூக பக்கங்களில் வெளியிட்டேன். எனக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் என எதிர்பார்த்து தான் செய்தேன். மற்ற புகைப்படங்கள் போடும் போது வந்த கமெண்ட்ஸை விட இது பல மடங்கு அதிகம்.
நெகட்டிவ் புகழால் விரைவில் வைரலாகலாம் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன். நல்ல பையன் கதாபாத்திரம் தான் என்னால் செய்ய முடியும் என்ற இமேஜை உடைக்க தான் அப்படி செய்தேன் என்னும் கூறியிருக்கிறார்.