Cinema News
நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. லால் சலாமில் பஞ்சாயத்து கிளப்பும் விஷ்ணு விஷால்.
Lal Salaam: வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஷ்ணு விஷால். இவரின் அப்பா தயாரிப்பாளராக இருந்ததால் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதில், முண்டாசுப்பட்டி, நீர்ப்பறவை, ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் என்கிற படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. வருகிற பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்.. 40 கோடியில் பங்களா!.. சொல்லி அடித்த அட்லீ!..
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் காட்சியிலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் ரஜினியின் மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறாராம். எனவே, விஷ்ணு விஷாலை விட அவருக்கு காட்சியில் முக்கியத்துவம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே, இதில் கடுப்பான விஷ்ணு விஷால் கதையில் அவருக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்?. ஒன்று எனக்கும் முக்கியத்துவம் இருப்பது போல காட்சிகளை வையுங்கள். இல்லை விக்ராந்தின் காட்சிகளை குறையுங்கள் என ஐஸ்வர்யாவிடம் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளாராம்.
இதையும் படிங்க: முதலுக்கே மோசம்!.. ஓவர் பில்டப் காட்டிய சலார்!.. தமிழ்நாட்டில் ஒரு நாள் வசூல் இவ்வளவுதானா?..
விஷ்ணு விஷால் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கிறார். மேலும், சில ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், விக்ராந்த் அப்படி இல்லை. பல வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்கள் ரசிக்கும்படியாக ஒரு நல்ல கதாபாத்திரம் இதுவரை அவருக்கு அமையவில்லை.
இதை புரிந்துகொண்டு விஷ்ணு விஷால் விட்டு தரலாம் என சினிமா பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். படம் விரைவில் வெளியாகவுள்ளதால் அதில் மாற்றமும் செய்ய முடியாது என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..