ரஜினி இருந்தே செல்ஃப் எடுக்கல!.. இதுல அந்த ஹீரோவுக்கு அத்தனை கோடி சம்பளம் வேணுமா?..

Published on: February 13, 2024
---Advertisement---

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதன் பின்னர், பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன், எஃப்ஐஆர், கட்டா குஸ்தி மற்றும் லால் சலாம் உள்ளிட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்லூரியில் கண்ணதாசனை கலாய்த்த மாணவர்கள்!.. கவிஞர் கொடுத்த பதிலடிதான் ஹைலைட்!..

இதில், இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத்தந்தன. கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படம் 10 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை விஷ்ணு விஷால் சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தே லால் சலாம் திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், இவ்ளோ சம்பளம் கேட்டால் எப்படி? என தயாரிப்பாளர்கள் புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சமத்தா சோபாவுல!.. சமந்தா என்ன பண்றாரு பாருங்க.. இப்போ எல்லாம் அந்த வேலையை இவரே பார்க்குறாரா?..

ஆனால், விஷ்ணு விஷால் தனக்கு 30 கோடிக்கும் அதிகமாக மார்க்கெட் இருப்பதாகவும் 8 கோடியே கம்மி தான் என்றும் பேசி தயாரிப்பாளர்களிடம் அந்தளவுக்கு சம்பளம் கொடுத்தால் நடிக்க வரேன் எனக் கூறுகிறாராம்.

பல படங்களில் தனக்கு சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என சொல்லி விட்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் விஷ்ணு விஷால் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.