மாமா டவுசர் கிழியப்போகுது... பதறிப்போய் விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்!

by பிரஜன் |   ( Updated:2022-07-28 09:33:11  )
vishnu dp
X

vishnu dp

அரைநிர்வாண போட்டோ ஷூட் குறித்து பதறிப்போய் விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்!

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படத்திலே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன் , ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

கடைசியாக FIR படத்தில் நடித்திருந்தார். இவர் ரஜனி நட்ராஜ் என்ற பெண்ணை காதலித்து 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2018ல் விவாகரத்து பெற்று விட்டனர்.

vishnu

vishnu

அதையடுத்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் விஷ்ணு விஷால். தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால் அரைநிர்வாணமாக படுக்கைறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

vishnu-1

vishnu-1

இதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இதனால் பதறிப்போன விஷ்ணு விஷால் இது கூறியது விளக்கம் கொடுத்துள்ளார்.

vishnu-2

vishnu-2

அதாவது, முதலில் அது போட்டோஷூட் இல்லை, தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ. என் physique நன்றாக இருந்ததால் என் மனைவி அதை எடுத்தார். ஆனால் அதை போஸ்ட் செய்யலாமா எடுத்தார். என்பதை யோசித்தபோது சமீபத்தில் ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நிர்வாண போட்டோ வெளியிட்டது தெரிந்தது.

vishnu-3

vishnu-3

என்னை இது போன்ற படங்களுக்கும் இயக்குனர்கள் அணுகலாம். இப்படிப்பட்ட படங்களில் என்னால் நடிக்க முடியும் என ஒரு perception இருக்கிறது. அதை உடைக்க தான் இப்படி போட்டோக்கள் வெளியிட்டேன்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:

Next Story