துபாய்ல அப்படி என்னதான் இருக்கு..? மற்றுமொரு திரைப்பிரபலம் விசிட்...
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு தொடங்கி தற்போது வெளியான உள்ள எப்ஐஆர் படம் வரை ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் தான் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
வித்தியாசமான கதைகள் மட்டுமல்ல பல அறிமுக இயக்குனர்களுக்கும் விஷ்ணு விஷால் வாய்ப்பளித்துள்ளார். அந்த இயக்குனர்கள் அனைவருமே தற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களாக உள்ளனர். அந்த வகையில் துரோகி – சுதா கொங்காரா, முண்டாசுப்பட்டி – ராம்குமார், இன்று நேற்று நாளை – ரவிக்குமார் என பல இயக்குனர்களை விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் பேசுகையில், அதாவது, என்னுடன் பயணிக்கும் புதுமுக இயக்குனர்கள் அனைவரும் ஹிட் கொடுத்த பிறகு அடுத்த பெரிய ஹீரோவை நோக்கி செல்கிறார்கள்.
எப்ஐஆர் படம் முடிவடைந்த நிலையயில் விடுமுறையை கழிப்பதற்காக மற்ற் பிரபலங்களை போலவே இவரும் துபாய் சென்றுள்ளார். அங்கு செல்ஃபி எடுத்த போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.