விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் கொடுத்த லால் சலாம் ஹீரோ!..
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்த விஷ்ணு விஷால் அங்கே கமல் மற்றும் அமீர்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சூப்பர்ஸ்டார்களுடன் நான் என பதிவிட்டு இருந்தார்.
ஆனால், உடனடியாக எங்கிருந்து என்ன ஆர்டர் வந்ததென்று தெரியவில்லை, உடனடியாக லால் சலாம் பட ஹீரோ விஷ்ணு விஷால் stars are stars for a reason என முன்பு சூப்பர்ஸ்டார் என பதிவிட்டு இருந்த பட்டத்தை மாற்றி வெறும் ஸ்டார் என கமல்ஹாசனையும் அமீர் கானையும் மட்டம் தட்டி விட்டார் என சர்ச்சை வெடித்தது.
இதையும் படிங்க: முதலில் ஃபிளாப்!. 10 வருஷம் கழிச்சி செகண்ட் ரிலீஸில் சூப்பர் ஹிட் அடித்த படம்!….
நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எச்சரிக்கை வந்ததா? அல்லது செளந்தர்யா ரஜினிகாந்தின் உத்தரவா? என விமர்சனங்கள் கிளம்பின. இது ஒரு பக்கம் இருக்க, கமல்ஹாசனை எப்படி சூப்பர்ஸ்டார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துக் கொண்டு எப்படி நீ சொல்லலாம் என ரஜினி ரசிகர்களும் ரவுண்டு கட்டி அடிக்கத் தொடங்கினர்.
வெறும் ஸ்டார் என மாற்றிய நிலையிலும், சர்ச்சைகள் ஓயாத நிலையில், தற்போது இன்னொரு விளக்கத்தையும் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் ஓடிடிக்கே வரல.. அதுக்குள்ள நாய் பொழப்பா இருக்கே.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா?
சூப்பர்ஸ்டார்கள் என்றால் சூப்பர்ஸ்டார்கள் தான் என பதிவிட்டு இருந்த என் ட்வீட்டை டெலிட் செய்து விட்டு மாற்றி ஸ்டார்கள் என்றால் ஸ்டார்கள் தான் என பதிவிட்ட உடனே நான் ரொம்ப வீக் ஆகிட்டேன்னு நினைக்காதீங்க, என்னை பொறுத்தவரையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் அனைவரும் சூப்பர்ஸ்டார் தான். அதனால், என்னை வைத்து நெகட்டிவிட்டி பரப்ப நினைக்க வேண்டாம் என பதிவிட்டு ஒரே கும்பிடாக போட்டுள்ளார்.