தல சர்க்கஸுக்கு போவது போல நடந்துக்கிறாரு… திடீரென கொந்தளித்த விஷ்ணு விஷால்!

by Akhilan |
தல சர்க்கஸுக்கு போவது போல நடந்துக்கிறாரு… திடீரென கொந்தளித்த விஷ்ணு விஷால்!
X

Vishnu Vishal: பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள திடீர் பதிவால் தல ரசிகர்கள் கடுப்பாகி அவரை விமர்சித்து கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். கபடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் அதற்காக முறையாக டிரெயினிங் எடுத்துக்கொண்டே நடித்தவர்.

பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என இவர் நடிப்பில் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் கொடுத்தது. சரியாக உயர்ந்து வந்தவருக்கு திடீர் சறுக்கம் ஏற்பட்டது.

அவர் நடிப்பில் சமீபகாலமாக கட்டா குஸ்தியை தவிர மற்ற எந்த படமுமே பெரிய அளவில் சோபிக்கவே இல்லை. அதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்த லால் சலாம் படு தோல்வி அடைந்து இன்னும் ஓடிடிக்கு கூட விற்கப்படாமல் இருக்கிறது.

நடிப்பு மட்டுமல்லாமல் விஷ்ணு விஷால் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை பல இடங்களில் நிரூபித்து இருக்கிறார். ரஞ்சி விளையாட முடியாமல் இவருக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இவரின் திடீர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நானே ஒரு கிரிக்கெட்டர் என்பதால் இதுகுறித்து பேசவே வேண்டாம் என தொடர்ந்து தயங்கியே வந்தேன். ஆனால் இது ரொம்பவே கொடூரமாக உள்ளது.

ஏன் இவ்வளவு கீழே வர வேண்டும்? வெல்லவே கூடாது என விளையாடலாமா? சர்க்கஸை போல இருக்கிறது. விளையாட்டை விட எந்த தனிப்பட்ட நபரும் முக்கியம் இல்லை என குதறி இருக்கிறார். யாரை சொல்கிறார் என அலசினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தானாம் அது.

இதை பார்த்த அவர் ரசிகர்கள் விஷ்ணு விஷாலை கலாய்த்து வருகின்றனர். நீங்க மொத நல்ல படம் கொடுங்க அவரை அப்புறம் பேசலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

Next Story