ஊரே கொண்டாடிய ’ராட்சசன் ‘ படம்!.. விஷ்ணுவிஷால் வாழ்க்கையில் விபரீதமாக முடிந்த அந்த சம்பவம்!..
2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் திரில்லர் கதையாக வெளிவந்த படம் ‘ராட்சசன்’ திரைப்படம். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். விஷ்ணு விஷாலுக்கு இந்த படம் அவரின் கெரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றும் சொல்லலாம்.
போலீஸ் கதாபாத்திரத்தில் துப்பறியும் காட்சியில் தன்னுடைய கதாபாத்திரத்தை கொண்டு செல்லும் விதத்தில் விஷ்ணு விஷால் அசத்தியிருப்பார். ‘முண்டாசுப்பட்டி’ என்ற நகைச்சுவை மிக்க கலகலப்பான கதையை எடுத்த இயக்குனரா இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்று ஆச்சரியப்பட வைக்கிற அளவில் ராட்சசன் படம் அமைந்தது.
ஒரு சைக்கோ வில்லன் தான் பார்க்கிறவர்களை தன் வசத்திற்கு கொண்டு வந்து அவர்களை கொலை செய்து விடுகிறான். அப்படி பல பேரை வரிசையாக கொன்று கொண்டு இருக்கிறான். அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொய்வை காட்டுகிறது போலீஸ். ஆனால் நம்ம ஹீரோ போலீஸ் புத்திசாலித்தனமாக அந்த சைக்கோ கொலைகாரனை கொல்லுவது தான் கதை.
இந்த கதையை எந்த அளவுக்கு த்ரில்லிங்காக கொண்டு போகனுமோ கொண்டு சென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வைத்தார் இயக்குனர் ராம்குமார். இதற்கு முன் ஒரு கிராமத்து நாயகனாக பார்த்த விஷ்ணு விஷாலை ஒரு போலீஸாக மாஸாக காட்டியிருப்பார் இயக்குனர். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது ராட்சசன் படம்.
இதையும் படிங்க : “ரஜினி ஹீரோவா நடிக்கனுமா?”… அதிர்ச்சி அடைந்த பிரபல தயாரிப்பாளர்… அடம்பிடித்த மகேந்திரன்…
உலகமே ராட்சசன் வெற்றியை கொண்டாடிய சமயத்தில் படத்தின் கதாநாயகனால் அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. ஏனெனில் படம் வெளியாகி அடுத்த ஐந்து நாள்களில் அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டது. பிரபல நடிகரும் இயக்குனருமான கே. நடராஜனின் மகளான ரஜினி நடராஜன் தான் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி. இருவரும் கல்லூரி தோழர்களாக பின் லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் இருந்து தான் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். மேலும் என்னுடைய சராசரி வாழ்க்கையில் கூட என் மகனுடன் என்னால் இருக்க முடியவில்லை. இப்பொழுது அவரது அம்மாவுடன் தான் இருக்கிறார். அவரை இழந்தது தான் எனக்கு பெரிய இழப்பு என்று கூறி எல்லாரும் ராட்சசன் வெற்றியை கொண்டாடிய சமயத்தில் என்னால் மனதளவில் கொண்டாட முடியவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க : இன்னமுமா நம்பிட்டு இருக்காரு!.. பாபா மறுவெளியீட்டுக்கு காரணம் இந்த படம் தான்!.. ரிஸ்க் எடுக்கும் ரஜினி!..
விஷ்ணு விஷால் இப்போது ஜ்வாலா குட்டா என்ற பேட்மிட்டன் பிளேயரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவரது நடிப்பில் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.