தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தில் விஷ்ணு விஷால்... அதுவும் அந்த டாப் இயக்குனரோட படத்திலயாம்...

vishnu vishal
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருந்த படத்தில் தற்போது விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் விஷ்ணு விஷால். இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டாராம். வெயிலில் மணிக்கணக்கில் அமர்ந்து தனது உடலை கருப்பாக்கினார். பின்னர் 3 மாதங்கள் ஒரு பயிற்சியாளரின் கீழ் கபடி போட்டிகளுக்கு தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி பெற்றார். இத்தனை போராட்டங்களை கடந்து வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

Ratchasan
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் நகைச்சுவை திரைப்படமாக உருவான முண்டாசுப்பட்டி மற்றும் கிரிக்கெட்டை வைத்து உருவான ஜீவா இரண்டுமே விஷ்ணுவின் கேரியரில் மிகப்பெரிய உயரத்தினை கொடுத்தது.
இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்பதால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் மீண்டும் ராம்குமாருடன் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vishnu vishal_Ramkumar
2019ம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் உருவாக இருக்கும் புதிய படத்தில் தனுஷை ராம்குமார் இயக்கப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த படத்திற்கு வால் நட்சத்திரம் எனப் பெயர் கூட வைக்கப்பட்டு இருந்தது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருந்த இப்படத்தில் இருந்து தனுஷ் கால்ஷீட் காரணமாக விலகினார். அடுத்த அந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கிசுகிசுக்கள் இருந்த நிலையில் விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ராம்குமார் இணைந்து இருக்கிறார். இதனால் இப்படம் வால் நட்சத்திரம் தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அந்த மாதிரி போட்டோவை வெளியிட சொன்னது என் மனைவி தான்.. ஷாக் தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்…
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்த விஷ்ணு விஷால், தனது விவகாரத்து ராட்சசன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் தான் நடந்தது. அதனால் என்னால் அதன் வெற்றியை கொண்டாட முடியவில்லை. முண்டாசுப்பட்டி, ராட்சசனை தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த படத்தில் வெற்றி விழாவினை கொண்டாட ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.