Cinema News
கேன்சர்னு தெரிஞ்சும் அப்பா சொன்ன விஷயம்!.. மனமுடைந்து பேசிய விசு மகள்கள்.. மனைவி சொன்ன ஷாக் விஷயம்!
சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, டவுரி கல்யாணம், குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை என ஒவ்வொரு படத்திலும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை இடியாப்ப சிக்கல் கதைகள் மூலமாக ஒவ்வொரு முடிச்சாக போட்டு பின்னர் திரைக்கதையில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும் திறமை கொண்டவர் இயக்குனர் விசு.
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னராக விசு தனது குரு பாலச்சந்தர் போலவே சிறிய பட்ஜெட்டில் சிறப்பான படங்களை கொடுத்து வந்தார். இன்றும் தமிழ்நாட்டில் பலரும் விசு படங்களை விருப்பத்துடன் தினமும் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் பட வாய்ப்புக்கு ராஜா பட்ட பாடு!.. கடவுள் போல உதவிய நபர்!.. இவ்வளவு நடந்திருக்கா!..
கே டிவி உள்ளிட்டவற்றில் விசு படம் வெளியானால் பலமுறை பார்த்த ரசிகர்களும் மீண்டும் ஒருமுறை உட்கார்ந்த அந்த படங்களை பார்த்து வருகின்றனர். 1945 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த விசு கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 74 வயதில் விசு உயர்நீத்தார்.
விசுவின் மனைவி உமா மற்றும் அவரது மூன்று மகள்களான லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா ஆகியோர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விசுவுக்கு ஏற்பட்ட தொண்டை புற்றுநோய் பற்றியும் அதனால் அவரது குரல் பாதிக்கப்பட்டது குறித்தும் தனக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. மருத்துவர்கள் அந்த விஷயத்தை சொன்னதும் ஷாக் ஆகி விட்டோம்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து… ஆனா இதான் கஷ்டமா இருக்கு… ஓபனாக சொன்ன சுரேஷ்சந்திரா..
எப்படி அப்பாவிடம் சொல்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எங்கள் முகத்தை பார்த்த அப்பா எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்துட்டேன்மா இதையும் பார்த்துக்கலாம், நீ பயப்படாத என அவருக்கு நோயை வைத்துக் கொண்டு எனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொன்னார்.
விசுவின் மனைவி சொல்லும் போது அவருக்கு குரல் தான் முக்கியமானதாக இருந்தது. அது போன பின்னர் ஏதாவது வேண்டுமென்றால் தட்டில் தட்டி அழைப்பார். உணவை எல்லாம் குழந்தைக்கு கொடுப்பது போல மசித்து தான் கொடுப்பேன். அவர் இருந்த வரை ஆலமரமாய் இருந்து மூன்று பெண்களுக்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டார் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அதுலதான் அவர் வாழ்க்கையே இருக்கு! செல்ஃப் எடுக்காம தத்தளிக்கும் சார்பட்டா 2.. அப்போ அவ்ளோதானா