முதல் நாள் படப்பிடிப்பிலேயே குட்டையை கிளப்பிய விசு!.. மொத்தக் கதையும் மாறிய பிரபுவின் சூப்பர் ஹிட் படம்...
தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகராக விளங்கியவர் நடிகர் விசு. ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக வசனகர்த்தாவாக சினிமாவில் தன்னுடைய அர்ப்பணிப்பை வாரி வழங்கியவர் விசு. ஆரம்பகால படங்களில் இவரின் ஆளுமை முழு அளவில் வெளிப்படுத்தியிருப்பார்.
இவரின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக கருதப்பட்டது சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம். ஒரு வீட்டிற்குள் இருக்கும் உறவினர்களிடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதையை அழகாக சித்தரித்திருப்பார் விசு. படமும் வெற்றிகரமாக ஓடியது.
இந்த நிலையில் பிரபுவை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட தயாரிப்பாளரையும் இயக்குனரையும் ஏன் ஒட்டுமொத்தப் படக்குழுவையும் விசு குழப்பிய சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. பிரபு , சுகன்யா நடிப்பில் சந்தானப்பாரதி இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சின்ன மாப்பிள்ளை’. இந்த படத்தை உண்மையாகவே கார்த்திக்கு போட்டியாகவே எடுக்க திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் கார்த்திக் நடிப்பில் தெய்வவாக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இந்த பக்கம் பிரபுவை வைத்து சின்ன மாப்பிள்ளை திரைப்படத்தை எப்படியாவது சீக்கிரம் கொண்டுவரவேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் எண்ணியிருந்தனர். மேலும் சின்னத்தம்பி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய நிலையில் பிரபுவிற்கு இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையிலும் முதல் நாள் படப்பிடிப்பை தொடங்க் ஆயத்தமாகியிருந்திருக்கின்றனர்.
ஆனால் திடீரென்று விசு இந்த படத்தின் கதை முழுவதும் என்னை நோக்கியே பயணம் செய்வது மாதிரி எனக்கு தோன்றுகிறது எனவும் பிரபு தான் ஹீரோ அதனால் அவர் மீது கதை திரும்பினால் தான் நன்றாக இருக்கும் எனவும் கூற படக்குழு அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
எனினும் அவர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான், ஆனாலும் இந்த நேரத்தில் கதையை திரும்பவும் கலைமணியை மாற்ற சொன்னால் நன்றாக இருக்காது என்று கருதி கிரேஸி மோகனிடம் இந்த இடத்தில் மட்டும் மாற்றச் சொல்ல கிரேஸி மோகனோ முழு கதையையும் மாற்றி கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என கருதி படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.