Connect with us

Suriya46: கவின் பட போஸ்டர் காப்பி!. இதையா இவ்வளவு நாள் வச்சி ஒட்டிக்கிட்டிருந்தீங்க!…

poster

latest news

Suriya46: கவின் பட போஸ்டர் காப்பி!. இதையா இவ்வளவு நாள் வச்சி ஒட்டிக்கிட்டிருந்தீங்க!…

நடிகர் சூர்யாவுக்கு சிங்கம் 2 படத்திற்கு பின் அந்த அளவுக்கு ஒரு மெகா ஹிட் படம் இதுவரை அமையவில்லை என்றே சொல்லலாம்.. சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்கள் என்கிற விமர்சனத்தை பெற்றாலும் அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. ஓடிடியில் வெளியாந்து. மேலும், ஓவர் பில்டப் செய்யப்பட்ட கங்குவா திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவியது..

அதன்பின் வெளியான ரெட்ரோ படமும் சுமாரான வெற்றியை பெற்றது. அதன்பின் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா.. ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பதும் தெரியவில்லை. ஒருபக்கம் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடித்து முடித்திருந்தார்.

இன்று காலை அந்த படத்தின் போஸ்டர் வெளியானது.. அந்த படத்திற்கு விஸ்வநாத் & சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.. குழந்தையுடன் சூர்யா நிற்பது போலா போஸ்டரை டிசைன் செய்திருக்கிறார்கள்.. ஆனால் கவின் நடிப்பில் வெளியான உருவான டாடா திரைப்படத்திற்கும் இதேபோன்றுதான் போஸ்டரை உருவாக்கியிருந்தார்கள்..

அதாவது கவின் மடியில் அவரின் குழந்தை இருப்பது போன்ற அந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து டாடா போஸ்டரை காப்பியடித்து விஸ்வநாத் & சன்ஸ் பட போஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..

To Top