தமிழ் சினிமாவில் தனது இசையால் அனைவரையும் மயக்கியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் பாடல்கள் அனைவரின் மனதிற்கு இதம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இவரை மெல்லிசை மன்னன் எனவும் அழைத்தனர்.
இவர் மட்டுமல்லாமல் இவரின் நெருங்கிய தோழனாக திகழ்ந்தவர் ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தங்களது இசையால் கட்டி போட்டிருந்தனர் என கூறலாம். அந்த அளவுக்கு இவர்களின் இசை அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருந்தது.
இதையும் வாசிங்க:அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த அஜித்! படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்
இருவரும் இணைந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகினர். பின்னர் கர்ணன், மணி ஓசை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தங்களுக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினர்.
இவர்களின் நட்பு இவர்களின் வாழ்நாள் இறுதி வரையிலும் நீடித்தது. என்னதான் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் எனவே ஆசைப்பட்டார். ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.
இதையும் வாசிங்க:அக்காக்கு முன்னாடி தங்கைக்கு கல்யாணமா? சாய் பல்லவி தங்கை வெளியிட்ட ஷாக் வீடியோ!…
அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன். இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனை நடிக்க வைத்தே ஆகவேண்டும் என இப்படத்தின் இயக்குனரான சரண் விருப்பப்பட்டார். ஆனால் முதலில் இப்படத்தில் நடிக்க எம்.எஸ்.வி சம்மதிக்கவில்லையாம். பின்னர் சரணின் தொடர் முயற்சியால் சம்மதித்துள்ளார்.
ஆனால் அப்படத்தில் நடிக்க சம்பளமாக 10 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார் விஸ்வநாதன். மேலும் அப்பணத்தில் அவருக்கு 5 லட்சமும் பின்னர் ராமமூர்த்திக்கு 5 லட்சம் என இயக்குனரிடம் கேட்டுள்ளார். உடனே சரண் நீங்க மட்டும்தானே இப்படத்தில் நடிக்கிறீர்கள்… அப்போ எதற்காக ராமமூர்த்திக்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி அவன் வேறு நான் வேறு அல்ல… நானும் அவனும் ஒன்றுதான் என கூறியுள்ளார். இப்படி இவர்களின் நட்பு அனைவருக்கும் உதாரணமாக இருந்துள்ளது.
இதையும் வாசிங்க:விஜயகாந்துக்கும் எனக்கும் திருமணம்!… ராதிகா சொன்ன அந்த விஷயம் நடக்காமல் போக காரணம் தெரியுமா?
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…